AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bigg Boss: என்ன அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரெடியா? புதுவிதமாக தொடங்கும் நிகழ்ச்சி!

Bigg Boss The Common Man Show: தமிழில் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 9 முடிந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 10-க்கான சாதாரண போட்டியாளர்கள் தேர்விற்காக புதிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.

Bigg Boss: என்ன அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரெடியா? புதுவிதமாக தொடங்கும் நிகழ்ச்சி!
பிக் பாஸ் தி காமன் மேன் ஷோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Jun 2026 20:37 PM IST

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இது தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Star Vijay Tv) ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சி குறித்து புது அப்டேட் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முதல் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்துவருகிறார். பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9) நிகழ்ச்சியானது கடந்த 2026 ஜனவரி இறுதியில் நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை சீரியல் நடிகை திவ்யா கணேஷ் (Divya Ganesh) தட்டிச்சென்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 10க்கான புதிய முயற்சியாக “பிக் பாஸ் – தி காமென் மேன்” (Bigg Boss The Common Man) என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சாதாரணமான நபர்களை கலந்துகொண்டு வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்குபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிஜமாகவே கைவிடப்பட்டதா பிரேமலு 2 ? – நஸ்லேன் கொடுத்த அதிர்ச்சி தகவல்!

பிக் பாஸ் தி காமென் மேன் நிகழ்ச்சி குறித்து வெளியாகி புரோமோ குறித்த பதிவு:

பிக் பாஸ் தி காமென் மேன் நிகழ்ச்சி:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி வரும் 2026 அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இடத்தி விஜய் சேதுபதித்தன தொகுப்பாளராக தொகுக்கவுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் எப்போதும் பிரபலங்கள், சீரியல் நடிகர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பங்கேற்றுவருகின்றனர். அந்த வகையில் சீசன் 10 நிகழ்ச்சியில் சாதாரணமான நபர்களை போட்டியாளராக பங்கேற்கவைக்கலாம் என்ற புதிய முயற்சியை பிக் பாஸ் குழு எடுத்துள்ளது.. இந்நிலையில் அந்த சாதாரணமான நபர்களை தேர்ந்தெடுக்க பிக் பாஸ் குழு, பிக் பாஸ் தி காமென் மேன் என்ற நிகழ்ச்சியை தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் இணைந்து நடனமாடும் சிக்மா பட முதல் பாடல்.. ரிலீஸ் எப்போது?

இந்த நிகழ்ச்சியில் யார்வெடுமானாலும் கலந்துகொள்ளலாம். இதற்கு “vijay.JioHotstar.com” என்ற இணையத்தில் பதியவேண்டும். மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவார்கள் தன்னை பற்றியும், இந்த நிகழ்ச்சியில் எதற்காக கலந்துகொள்ளப்போகிறார்களா என்பது பற்றியும் 2 நிமிடம் வீடியோவையும் அதில் பகிரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us