AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வி.ஜே.மணிமேகலை புதுவீட்டு கிரஹப்பிரவேசம்.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!

VJ Manimegalai New Home: தமிழிலில் பிரபல சின்னத்திரை தொகுப்பாளராக இருந்துவருபவர் வி.ஜே.மணிமேகலை. இவர் புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அந்த விழாவிற்கான முன் ஏற்பாடுகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார்.

வி.ஜே.மணிமேகலை புதுவீட்டு கிரஹப்பிரவேசம்.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!
வி.ஜே.மணிமேகலை Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 31 May 2026 18:39 PM IST

ஆரம்பகாலத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வி.ஜே-வாக பணியாற்றிவந்தவர் மணிமேகலை (Manimegalai). இவர் சின்னத்திரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். மேலும் கடந்த குக் வித் கோமாளி சீசன் 6 (Cook With Comali 6) மற்றும் அதற்கு முந்தைய சீசன்களில் கோமாளியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய் தொலைகாட்சிளும் (Vijay TV) பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் படங்களின் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இவ்வாறு சின்னத்திரை மக்கள் மத்தியில் நெருக்கமானவராக இவர் இருந்துவருகிறார். அந்த வகையில், “ஹுஸைன் மணிமேகலை” (Hussain Manimegalai) என்ற யூடியூப் செயலையும் வைத்து நடத்திவருகிறார். இதில் தனது அன்றாட வேலைகள் மற்றும் தனது புது வீடு கட்டுவது தொடர்பான வீடியோவை பகிர்ந்துவருகிறார்.

மேலும் விரைவில் தங்களின் புது வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்தவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்காக ஆயத்தமாகும் பணிகள் குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வி.ஜே.மணிமேகலை பகிர்ந்துள்ளார். தற்போது இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: திருப்பி போற ஐடியாவே இல்லை.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா!

புது வீடு கிரஹப்பிரவேசம் தொடர்பாக வி.ஜே.மணிமேகலை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Hussain S K (@mehussain_7)

வி.ஜே.மணிமேகலை சமீபத்தில் புதிய வீட்டை ஒன்றை பிரம்மாண்டமாக காட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் விரைவில் நடக்கும் என அவர் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை கொடுத்துவருகிறார். இந்நிலையில் அந்த விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியிலிருந்து மணிமேகலை விலக காரணம் என்ன:

மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவராக இருந்துவந்தவர். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 6, அதற்கு முந்தைய சீசன்களில் பணியாற்றியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதற்கு முன் வெளியான சீசன்களில் கோமாளியாக பணியாற்றிய நிலையில், சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார்.

இதையும் படிங்க: ஒரு புதிய உலகத்தை உருவாக்கியிருக்கிறேன்.. வேட்டுவம் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த பா.ரஞ்சித்!

இந்த நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக பங்கேற்றிருந்த நிலையில், மணிமேகலைக்கு பிரியங்காவிற்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மணிமேகலை குக் வித் கோமாளி மற்றும் விஜய் டிவியில் பணியாற்றிவந்த நிகழ்ச்சிகளிருந்து முழுமையாக வெளியேறிவிட்டார். தற்போது ஜீ தமிழ் மற்றும் இதர தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூடியூ சேனலையும் நடத்திவரும் நிலையில், எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தொடர்பில் இருக்கிறார்.

Follow Us