Pa. Ranjith: ஒரு புதிய உலகத்தை உருவாக்கியிருக்கிறேன்.. வேட்டுவம் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த பா.ரஞ்சித்!
Vettuvam Release Update: சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பா.ரஞ்சித். இவரின் இயக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான படமாக தயாராகியுள்ளதுதான் வேட்டுவம். சமீபத்தில் யூடியூப் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பா.ரஞ்சித், வேட்டுவம் படத்தின் ரிலீஸ் மற்றும் அப்டேட் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் (Pa. Ranjith) தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை கொடுத்துவருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் சியான் விக்ரம் (Chiyaan Vikram) போன்ற பல்வேறு நடிகர்களுடன் இணைந்து படங்களை இயக்கியுள்ளார். அந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் தங்கலான் (Thangalaan). இதில் விக்ரம், பார்வதி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2024ம் ஆண்டில் இப்படம் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. அடுத்ததாக பா.ரஞ்சித் இயங்கிவந்த படம்தான் வேட்டுவம் (Vettuvam). இதில் அட்டகத்தி தினேஷ் (Attakathi Dinesh) மற்றும் ஆர்யா (Arya) இணைந்து நடித்துள்ளனர்.
அதிரடி ஆக்ஷன், திரில்லர் மற்றும் அட்வெஞ்சர் போன்ற கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. சமீபத்தில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய பா.ரஞ்சித், அதில் வேட்டுவம் படத்தின் அப்டேட் மற்றும் கதைக்களம் பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: இந்த வீக்கெண்டில் ஓடிடியில் என்ன படம் பார்க்க பிளான் வச்சிருக்கீங்க?
வேட்டுவம் திரைப்படம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயம்:
அந்த நேர்காணலில் பேசிய பா.ரஞ்சித், “வேட்டுவம் படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என திட்டம். படம் நன்றாக வந்துருகிறது. ஒரு புதிய உலகத்தை உருவாக்கியிருக்கிறேன். நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். அதற்கு சாண்டி மாஸ்டர்தான் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளர்.
இதையும் படிங்க: நடிகர் அஜித்தின் தாயார் மறைவு – முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி
வேட்டுவம் படத்தில் ஆக்ஷன், அட்வெஞ்சர் மற்றும் சைன்ஸ்பிக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் என நம்புறேன். வேட்டுவம் பட கதையின்மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கு, அதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கிவருகிறோம்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
வேட்டுவம் திரைப்படம் பற்றி இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய வீடியோ பதிவு:
Dir #PaRanjith about #Vettuvam
– Vettuvam is almost complete, and we are planning to release the movie after August. The film has turned out really well.
– I have built a new world in this film, and I hope the audience will like it.pic.twitter.com/bBScXf9oDN— Movie Tamil (@_MovieTamil) May 30, 2026
இந்த வேட்டுவம் படத்தில் ஆர்யா, அசோக் செல்வன், அட்டகத்தி தினேஷ் மற்றும் தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், படம் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது.படம் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருக்கும் நிலையில், 2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.