Suriya: கருப்பு சூப்பர் ஹிட்.. ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த சூர்யா!
Suriyas Car Gift to DOP G.K.Vishnu: கடந்த 2026 மே 15ம் தேதியில் வெளியாகி உலகமெங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றியை பெற்றுவரும் படம்தான் கருப்பு. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி, சிறப்பான காட்சிகளை கொடுத்தவர் ஜி.கே.விஷ்ணு. அவரை பாராட்டி நடிகர் சூர்யா, ரூ 30 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா பேட்மேன் எடிஷன் காரை பரிசாக வழங்கியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பிலும், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தில் சூர்யா கருப்பசாமியாகவே நடித்து திரையரங்கையே தெறிக்கவிட்டவருகிறார். இப்படமானது கடந்த 2026 மே 15ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போதுவரையிலும் வெற்றிகரமாக வெளியாகிவருகிறது. கிட்டத்தட்ட 16 நாட்களை தாண்டியும் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் இப்படம் வெளியாகிவருகிறது. இப்படத்தில் சூர்யா, திரிஷா (Trisha), இந்திரன்ஸ், அனகா மாய ரவி, ஆர்.ஜே.பாலாஜி, ஷிவதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு ( DOP GK.Vishnu) பணியாற்றியுள்ள நிலையில், காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது.
மேலும் ரசிகர்களாலும் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் புகழப்பட்டுவருகிறது. அந்த வகையில், கருப்பு படமானது மாபெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவுக்கு நடிகர் சூர்யா மகேந்திரா காரை பரிசளித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து ஜி.ஜே.விஷ்ணு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: LCU-வில் நுழைந்த மாஸ் ஹீரோ.. ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவுக்கு மகேந்திரா காரை பரிசளித்த சூர்யா:
நடிகர் சூர்யா, படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்களை பாராட்டி கார் போன்ற பரிசை வழங்குவது வழக்கமே. இறுதியாக கார்த்தியின் மெய்யழகன் படத்தை இயக்கியிருந்த இயக்குநர் பிரேம் குமாருக்கு காரை பரிசாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவிற்கு மாபெரும் வெற்றி படமாக கருப்பு அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பெத்தி ஒரு இன்ஸ்பிரேஷன் படம்.. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ராம் சரண்!
அந்த விதத்தில், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவுக்கு, ரூ 30.25 லட்சம் மதிப்புள்ள மஹேந்திர பேட்மேன் எடிஷன் காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
சூர்யாவிற்கு நன்றி தெரிவித்து ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Just God things!!
Thank you @Suriya_offl sir.
You have a huge heart!!!! #Karuppu pic.twitter.com/N8CtzgHRjr— GK Vishnu (@dop_gkvishnu) May 31, 2026
அந்த பதிவில், “இதெல்லாம் இறைவன் அருளால்தான், உங்களுக்கு ஒரு பெரிய மனம் இருக்கிறது, மிக்க நன்றி சூர்யா சார்” என அதில் ஜி.கே.விஷ்ணு கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் சூர்யாவையும் அவரின் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.