விஸ்வாசம் அஜித் குமாரின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் – தயாரிப்பாளர் ஓபன் டாக்
Highest-grossing film in Ajith Kumars career is Viswasam | தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் வலம் வருபவர் கேஜேஆர் ராஜேஷ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் சினிமாவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக பேசினார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் அமராவதி என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் அஜித் குமார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் அஜித் குமார் நடிப்பில் எந்தப் படம் அதிக அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது என்றும், அந்தப் படம் வசூல் செய்ய என்ன காரணம் என்று பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் சமீபத்தில் சினிமா நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




விஸ்வாசம் அஜித் குமாரின் கெரியரில் அதிக வசூல் செய்த படம்:
12 நாட்கள் நீடித்த பொங்கல் விடுமுறைக்காலம் காரணமாகவே, ‘விஸ்வாசம்’ திரைப்படம் அஜித் குமாரின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்தது. தற்போதைய சூழலில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் ஆகியோரின் படங்களை மட்டுமே ரசிகர்கள் ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாட, திரையரங்குகளுக்குத் திரண்டு செல்கின்றனர். மற்ற நட்சத்திரங்களைப் பொறுத்தவரை, படத்தின் உள்ளடக்கம் சிறப்பாக இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள். இல்லையெனில் அவர்கள் வரமாட்டார்கள் என்று தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Sigma: ஜேசன் சஞ்சய் இணைந்து நடனமாடும் சிக்மா பட முதல் பாடல்.. ரிலீஸ் எப்போது?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Viswasam became #AjithKumar’s career-highest grosser largely because of the 12-day Pongal holiday season. Currently, only #SuperstarRajinikanth, #ThalapathyVijay, and #AK are stars 🌟 whose audiences walk into theatres to celebrate their films like a festival. 💥For the rest of… pic.twitter.com/2mkBdjOiP9
— Movies Singapore (@MoviesSingapore) June 2, 2026
Also Read… Bigg Boss: என்ன அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரெடியா? புதுவிதமாக தொடங்கும் நிகழ்ச்சி!