கவினின் மரணத்துக்கு காரணம் காதல் தான் – கஸ்தூரி ராஜா சர்ச்சை பேச்சு
அக்னி சிறகுகள் கல்வி அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் இயக்குநர் கஸ்தூரி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கவின் மரணத்திற்கு காதல்தான் காரணம். கல்யாணம் செய்து வைக்க அப்பா அம்மாவுக்கு தெரியாதா? என்று பேசியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது.
அக்னி சிறகுகள் கல்வி அறக்கட்டளையின் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இயக்குநரும் இயக்குநர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கவின் மரணத்திற்கு காதல்தான் காரணம். கல்யாணம் செய்து வைக்க அப்பா அம்மாவுக்கு தெரியாதா? என்று பேசியது பெரும் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் பலரும் அவரது பேச்சை கண்டித்து வருகின்றனர். அவர் பேசியது குறித்து இ்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கஸ்தூரி ராஜா சர்ச்சை பேச்சு
நிகழ்ச்சியில் பேசிய கஸ்தூரி ராஜா, இன்றை இளைஞர்களுக்கு படிப்பு, காதல் அதன் பின் தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். சமீபத்தில் கூட செய்தியில் கவின் என்பவர் கொலை செய்யப்பட செய்தியை பார்த்தேன். அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, வேலைக்கு போன பையன். யாரை குறை சொல்வது? யாரையும் சொல்ல முடியாது. அந்த மரணத்துக்கு ஒரே காரணம், காதல் என்று சொல்லப்படும் கொடிய செயல் தான் என்றார்.
இதையும் படிக்க : Suriya: கருப்பு சூப்பர் ஹிட்.. ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த சூர்யா!




மேலும் பேசிய அவர், படிக்கப்போனால் படி, வேலைக்கு போனால் வேலைக்கு போ. கல்யாணம் என்ற நிலை வரும் போது அப்பா அம்மாவிடம் விடு. உனக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்வார்கள். அவர்களின் வலியை இன்றைய பிள்ளைகள் உணர்வதில்லை. உங்களுக்கு ஒரு நல்ல கல்யாணம் செய்து வைக்க அந்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா? என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், காதல் தவறு என சொல்லவில்லை. எனக்கு 20 வயதுக்கு முன்பே திருமணமாகிவிட்டது, என் மனைவிக்கு அப்போது 15 வயதுதான். கிட்டத்தட்ட அது செல்லாத கல்யாணம் தான். அதற்கு முன்பு காதல் வந்தது. எனவே படிப்பு தடம் புரண்டது. டிகிரியை முடிக்காமல் போனதற்கு ஒரே காரணம் காதல் தான். நம் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு எதுவெல்லாம் ஆதரவாக இருக்கிறதோ அது எல்லாம் தான் காதல். உன் வாழ்க்கையை பின்னுக்கு இழுக்கும் எதுவும் காதல் கிடையாது. காதல் எந்த வயதிலும் வரும், ஆனால் கொஞ்சம் காத்திருங்கள் என்று பேசினார்.\
இதையும் படிக்க : Ajith Kumar: தாயின் இறுதிச்சடங்கு.. பாதுகாப்பு கொடுத்த போலீசாருக்கு நன்றி சொன்ன அஜித்!
மேலும் நிகழ்ச்சியில் அவரிடம் போயஸ் கார்டனில் வசிக்கும் உங்கள் மகன் தனுஷ் அரசியலுக்கு வருவாரா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகன்களோ பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம். சென்னையில் மிக பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம் தான். கலைஞர் வாழ்ந்த அந்த இடம் தான் ஒளி பிறந்த இடம் என்றார்.