AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோலிவுட் டூ டோலிவுட்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார்? அட இவர் பிரபல இயக்குநர்!

Tamil Director Childhood Photo : சினிமாவில் பலவேறு நட்சத்திர நாயகர்கள், நாயகிகள் மற்றும் இயக்குநர்கள் இருந்தவருகிறார்கள். அவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகுவதுண்டு. அந்த வகையில் இந்த போட்டோவை இருக்கும் சிறுவன் யார் என விவரமாக பார்க்கலாம்.

கோலிவுட் டூ டோலிவுட்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார்? அட இவர் பிரபல இயக்குநர்!
பிரபல இயக்குநரின் சிறுவயது புகைப்படம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 01 Jun 2026 08:23 AM IST

சமூக ஊடகங்களின் வளர்ச்சியை தொடர்ந்து, சினிமாவில் (Cinema) பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றிய விஷயங்கள் விரல் நுனியில் இருக்கிறது. அந்த வகையில் அந்த பிரபலங்களின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படம் மற்றும் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவரும். அந்த வரிசையில், மேலே இருக்கும் போட்டோவில் உள்ள சிறுவன் யார் என தெரியுமா?. இவர் கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema Director) பிரபல இயக்குநர்களில் ஒருவர். இவரின் இயக்கத்தில் முதல்வர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Suparstar Rajinikanth) போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இவரின் இயக்கத்தில் முதல் படத்தில் நடிகர் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் இப்படம் இவருக்கு எந்த வரவேற்பையும் கொடுக்கவில்லை. இந்நிலையில் இவருக்கு வரவேற்பை கொடுத்த படமாக அமைந்தது.

அவரின் 2வது படம்தான் இதில் கார்த்தி (Karthi) நாயகனாக நடித்திருந்த நிலையில், மக்களிடையே எதிர்பாராத வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனது 3வது படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்தார் இப்படமும் சூப்பர் ஹிட். இப்பொது தெரிந்திருக்கும் இந்த சிறுவன் யார் என, இது வேறுயாருமில்லை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் (Lokesh Kanagaraj).

இதையும் படிங்க: நான் அப்போதே ஹீரோவாகவேண்டும் என ஆசைப்பட்டேன் – கலகலப்பாக சியான் விக்ரம் பகிர்ந்த விஷயம்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Arun Matheswaran (@blackoyibo88)

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம் என்ற திரில்லர் படத்தின் முழ இயக்குநராக அறிமுகமானார். இதில் நடிகர்கள் ஸ்ரீ, சந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் இவருக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்தது. இதற்கு கார்த்தியின் நடிப்பில் கைதி என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இவருக்கு தென்னிந்திய மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இதற்கு பின் உடனே தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: ஒரு புதிய உலகத்தை உருவாக்கியிருக்கிறேன்.. வேட்டுவம் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த பா.ரஞ்சித்!

இப்படம் மேலும் இவருக்கு பிரபலத்தை கொடுத்து, சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதற்கு பின் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என லீட் நடிகர்களுடனும் திரைப்படங்களில் இணையானது பணியாற்றினார். தற்போது டிசி என்ற படத்தில் நடித்து ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இவ்வாறு இயக்குநர், ஹீரோ, தயாரிப்பாளர் என அடுத்தடுத்த கட்டத்திற்கு லோகேஷ் கனகராஜ் முன்னேறியுள்ளார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனின் நடிப்பில் AA23 என்ற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us