STR51 படத்திற்கு பிறகே தலைவர்173 இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து.. தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!
Producer Archana Kalpathi About STR51: அஸ்வத் மாரிமுத்து தற்போது பிரபல இயக்குநர்களில் ஒருவராக பேசப்பட்டுவருகிறார். இவர் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலம்பரசனின் STR51 படத்தையும் இவர் இயக்குவதாக அறிவித்த நிலையில், எந்த படத்தை முதலில் இயக்கவுள்ளார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழில் அசோக் செல்வன் நடித்திருந்த ஓ மை கடவுளே (Oh My Kadavule) என்ற படத்தை இயக்கியதன் மூலமாக, இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu). இவரின் இயக்கத்தில் இப்படத்திற்கு பிறகு கடந்த 2025ம் ஆண்டில் டிராகன் (Dragon) என்ற படமானது வெளியானது. இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், திரையரங்குகளில் கிட்டத்தட்ட ரூ 150கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு சிலம்பரசனின் (Silambarasan) STR51 படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சிலம்பரசன், இயக்குநர் வெற்றிமாறனின் (vetrimaaran) இயக்கத்தில் அரசன் (Arasan) படத்தின் ஷூட்டிங்கில் உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என கூறப்படுகிறது.
அந்த விதத்தில், அஸ்வத் மாரிமுத்துவும் ரஜினிகாந்தை வைத்து தலைவர்173 படத்தை இயக்கவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, STR51 படத்தின் ஷூட்டிங் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க:
STR51 திரைப்பட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து பேசிய அர்ச்சனா கல்பாத்தி:
அந்த நேர்காணலில் பேசிய அர்ச்சனா கல்பாத்தி அதில், “STR51 திரைப்படம் ஓர் அட்டகாசமான கதை.இது ஒரு நியூ வேர்ல்டை உருவாக்கும் மற்றும் ஒரு நல்ல விஷயத்தை பேசும் ஒரு அருமையான படம். அஸ்வத் மாரிமுத்து இப்படத்தின் ஸ்கிரிப்டை தயார்செய்ய கிட்டத்தட்ட 1 ஆண்டு எடுத்துக்கொண்டார். அஸ்வத் கதையை எழுதுவதற்கு நேரம் எடுத்துக்கொள்வார். இப்போது அவரும் , சிலம்பரசனும் இந்தத் திட்டத்தை எப்போது தொடங்குவது என்று முடிவு செய்ய வேண்டும். தற்போது நாங்கள் சிலம்பரசன் கொடுக்கும் தேதிக்காக காத்திருக்கிறோம்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே தெரிகிறது, அரசன் பட ஷூட்டிங்கை முடித்த கையேடு சிலம்பரசன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் படத்தில் இணைவார் என்று.
இதையும் படிங்க:
அஸ்வத் மற்றும் சிலம்பரசனின் படம்குறித்து அர்ச்சனா கல்பாத்தி பேசியது குறித்த பதிவு:
#STR51 is a kick-ass script 👌. It’s a world-building movie and a superb film 👌 that talks about something good. #AshwathMarimuthu took 1 year to develop the script. He takes time to write, and now he and #STR have to decide when to commence the project. We’re now waiting for… pic.twitter.com/04y17RebX3
— Movies Singapore (@MoviesSingapore) June 5, 2026
அஸ்வத் மாரிமுத்து மற்றும் ரஜினிகாந்தின் கூட்டணி:
அஸ்வத் மாரிமுத்துதான் ரஜினிகாந்தின் தலைவர்173 படத்தை இயக்குவதாக கிகாரபூர்வ தக்வல்களை எதுவும் வெளியாகவில்லை. ஆனால், அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, தலைவர் 143 படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும் அஸ்வத் மாரிமுத்து, ரஜினிக்கு கதை கூறியுள்ள நிலையில், அதை ரஜினிகாந்த் படித்துவிட்டு இன்னும் உறுதியளிக்கவில்லை என வட்டாரங்கள் கூறுகிறது. அவ்வாறு சூப்பர் ஸ்டார் ஒப்புக்கொண்டாலும், சிலம்பரசனின் முடிவை பார்த்துக்கொண்டே அஸ்வத் அந்த படத்தை இயக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.