AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: கருப்பனின் ஆட்டம்.. தமிழகத்தில் மட்டும் 21வது நாளின் முடிவில் கருப்பு படத்தின் வசூல் இத்தனை கோடியா?

Karuppu Movie TN collections: நடிகர் சூர்யாவின் நடிப்பில், கடந்த 2026 மே 15ம் தேதியில் வெளியாகி திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவந்த திரைப்படம் கருப்பு. இப்படமானது 3 வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. இந்நிலையில் 21வது நாளின் முடிவில் தமிழகத்தில் மட்டும் கருப்பு படம் மொத்தம் எவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Karuppu: கருப்பனின் ஆட்டம்.. தமிழகத்தில் மட்டும் 21வது நாளின் முடிவில் கருப்பு படத்தின் வசூல் இத்தனை கோடியா?
கருப்பு திரைப்படம் தமிழ்நாடு வசூல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Jun 2026 21:21 PM IST

இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தில் நடிகர் சூர்யா (Suriya) லீட் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை திரிஷா கிருஷ்ணனும் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தார். இதில் சூர்யா கருப்பசாமியாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இப்படமானது நீதியை நிலைநாட்ட கருப்பசாமியை மனித ரூபத்தில் வந்து, நீதி வழங்கியது தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு திரையரங்கையே தெறிக்கவிட்டது. மேலும் இதில் மலையாள நடிகர் இந்திரன்ஸ் (Indrans) மற்றும் நடிகை அனகா மாய ரவியின் (Anagha Maya Ravi) எமோஷனல் காட்சிகள் மக்களை கண்ணீரில் மூழ்கடித்தது என்றே கூறலாம். இவ்வாறு ஆக்ஷன், எமோஷனல், அதிரடி மற்றும் தெய்வீகம் என சூர்யாவின் பேன் மேட் படமாகவே கருப்பு திரைப்படம் இருந்தது.

இப்படமானது உலகமெங்கும் கிட்டதட்ட ரூ 320 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை படித்துவரும் நிலையில், தமிழகத்திலும் சூர்யாவிற்கு எதிர்பாராத வசூல் கிடைத்துவருகிறது. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி 21வது நாளை கடந்துள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சூர்யாவின் கருப்பு படமானது ரூ 175 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடிய கருப்பு படத்தின் காட் மோட் வீடியோ பாடலை வெளியிட்டது படக்குழு

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

கருப்பு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது:

இந்த கருப்பு படமானது திரையரங்குகளில் 21வது நாளையும் கடந்து சிறப்பாக வெளியாகிவருகிறது. தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளிலும் தற்போதுவரையிலும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெளியாகிவருகிறது. சூரியவிர்க்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் மாஸ் வரவேற்பை பெற்றுவரும் படமாக கருப்பு அமைந்துள்ளது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது பெற்றுள்ளது.

இதையும் படிங்க: திடீரென இன்ஸ்டாவிலிருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. யார் தெரியுமா?

அதன்படி கருப்பு படம் திரையரங்குகளில் தற்போதுவரையிலும் வெளியாகிவரும் நிலையில், இப்படத்தை வரும் 2026 ஜூன் 15ம் தேதிக்கு பிறகு ஓடிடியில் வெளியிட படக்குழு, ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. அதன்படி இப்படம் வரும் 2026 ஜூன் 15ம் தேதிக்கும்மேல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us