கருப்பு படத்தில் டெலீட்டட் காட்சிகள் குறித்து எடிட்டர் கலைவாணன் ஓபன் டாக்
Karuppu Movie Deleted Scene | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படத்தின் டெலீட்டட் காட்சி குறித்து எடிட்டர் விளக்கமாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தப் படம் உலக அளவில் 15 நாட்களில் ரூபாய் 300 கோடிகள் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் இந்தப் படம் தான் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கருப்பு சாமியாக நடித்து இருந்தார் என்பதை விட வாழ்ந்து உள்ளார் என்றே சொல்லலாம். அப்படி அவர் சாமி வந்து ஆடும் காட்சிகள் அனைத்தும் தியேட்டரில் தெறிக்க விட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் மற்றும் வசூல் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அளித்து வரும் பேட்டிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




கருப்பு படத்தில் டெலீட்டட் காட்சிகள் குறித்து எடிட்டர் ஓபன் டாக்:
இப்படத்திலிருந்து நாங்கள் எந்தவொரு நீண்ட காட்சியையும் நீக்கவில்லை. சில கௌரவத் தோற்றங்களையும், துணை கதாபாத்திரங்கள் இடம்பெறும் காட்சிகளையும் மட்டுமே நீக்கியுள்ளோம்; இவை அனைத்தும் சேர்த்து சுமார் 20 முதல் 30 நொடிகள் மட்டுமே இருக்கும். ஆர்யா சாரின் கௌரவத் தோற்றம், இரட்டை மருத்துவர் சகோதரர்களின் மெட்ரோ காட்சி மற்றும் ‘The GOAT’ ஜீவா இடம்பெறும் காட்சி போன்ற சிறிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஆர்யா சாரின் காட்சிதான் நீக்கப்பட்ட காட்சிகளிலேயே மிக நீண்டதாகும்; இக்காட்சி தனியாக, ‘நீக்கப்பட்ட காட்சி’ என்ற வகையில் வெளியிடப்படும்.
Also Read… பெத்தி படத்திலிருந்து வெளியானது மஸ்ஸா மஸ்ஸா பாடலின் லிரிக்கள் வீடியோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Editer #Kalaivanan about #Karuppu Deleted Scenes
– We have not deleted any lengthy scenes from this film. We have only removed a few cameo appearances and scenes featuring minor characters, totaling around 20 to 30 seconds.
– Small scenes such as #Arya sir’s cameo, the #Doctor… pic.twitter.com/r6q6UBu4oI
— Movie Tamil (@_MovieTamil) June 3, 2026