தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடிய கருப்பு படத்தின் காட் மோட் வீடியோ பாடலை வெளியிட்டது படக்குழு
God Mode Video Song From Karuppu Movie Out Now | தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் வெளியாகி தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படத்தில் இருந்து தற்போது காட் மோட் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வரிசையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு முதலாவதாக வெளியான படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சூர்யாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் கருப்பு என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் சுமார் 300 கோடிகளுக்கு அதிகமாக உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. இந்தப் படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் திரையரங்குகளில் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படத்தில் நடித்த சூர்யாவின் நடிப்பையும் ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். படம் எந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதோ அதே அளவிற்கு இந்தப் படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




கருப்பு படத்தின் காட் மோட் வீடியோ பாடலை வெளியிட்டது படக்குழு:
கருப்பு படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து இருந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தில் இருந்து பாடல்களின் லிரிக்கள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது படம் திரையரங்குகளில் வெளியான பிறகு தொடர்ந்து பாடல்களின் வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது படக்குழு கருப்பு படத்தில் இருந்து காட் மோட் என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… தமிழ்நாட்டில் தளபதி விஜய் முதலமைச்சராக வெற்றி பெற்றது வித்தியாசமானது – பவன் கல்யாண் பேச்சு!
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The epic celebration that sent audiences into a frenzy!#GodMode from #Karuppu – Video song out now. A @SaiAbhyankkar Musical.
The ONE @Suriya_offl‘s mega blockbuster, on the big screens now.
A feast by @RJ_Balaji and team.
A @dop_gkvishnu Visuals.… pic.twitter.com/KzGXKFGQfj— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 4, 2026
Also Read… ஜனநாயகன் இணையத்தில் லீக் – ஐடி ஊழியர் கைது – பரபரப்பு தகவல்