AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இருமுகன் இயக்குநரின் கூட்டணியில் விக்ரம்.. சியான்63 பட ஷூட்டிங் இன்று தொடக்கம்!

Chiyaan63 Shooting Start: சியான் விக்ரமின் நடிப்பில் 63வது படமாக தயாராகிவருவதுதான் சியான்63. இதை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் நிலையில், இன்று 2026 ஜூன் 07ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகின்றன.

இருமுகன் இயக்குநரின் கூட்டணியில் விக்ரம்.. சியான்63 பட ஷூட்டிங் இன்று தொடக்கம்!
சியான்63 திரைப்பட படப்பிடிப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jun 2026 15:21 PM IST

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் நடிப்பின் சிகரம் என போற்றப்படுவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவர் தொடர்ந்து புதிய படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் 2 என்ற திரைப்படமானது வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக கிட்டத்தட்ட 2 படங்களுக்கும் மேல் விக்ரம் ஒப்பந்தமாகியிருந்தார். அதிலும் அறிமுக இயக்குநர் போடி கே ராஜ்குமாரின் (Bodi K Rajkumar) இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடையாத காரணத்தால் விக்ரம், இயக்குநர் ஆனந்த் சங்கர் (Anand Shankar) இயக்கத்தில் சியான்63 (Chiyaan63) என்ற படத்தில் இணைந்துவிட்டார்.

இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த மாதத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 2026 ஜூன் 7ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனி – ஸ்வாசிகாவின் ‘நூறு சாமி’ படம்.. ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பு!

விக்ரமின் சியான்63 திரைப்பட ஷூட்டிங் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு :

சியான் விக்ரமின் 63வது படத்தின் ரிலீஸ் எப்போது:

சியான் விக்ரமின் 63வது படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படமாக தயாராகிவருகிறதாம். இப்படத்தை இருமுகன் படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர்தான் இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் கிராமத்து ஆக்ஷன் கதையில் இப்படம் தயாராகிவருகிறதாம். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ரியா ஷிபு நடிக்கவுள்ளார். இவர் மலையாளத்தில் சர்வம் மாயா என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷின் மருமகனுடன் இணைந்து நடிக்கும் குஷ்புவின் மகள்.. வைரலாகும் புரோமோ வீடியோ!

மேலும் இப்படத்தில் மற்றொரு நடிகையாக கயாடு லோஹரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி மற்றும் டாகடர் படத்தில் நடித்த ரெட்டியார் போன்ற பிரபலங்கள் நடிப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இப்படமானது வித்தியாசமான கதையில் தயாராகிவரும் நிலையில், 2026 ஆண்டு இறுதி அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.

Follow Us