கில்லர் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து… உயிரிழந்த மதன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய எஸ்.ஜே.சூர்யா!
SJ Suryahs 10 Lakh Aid to Killer Set Accident Victims Family: எஸ்.ஜே.சூர்யா இயக்கத்திலும், நடிப்பிலும் புதிதாக உருவாகிவரும் படம்தான் கில்லர். இப்படத்தின் ஷூட்டிங்கில் கேஸ் சிலிண்டர் வெடிப்பில் மதன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சத்தை எஸ்.ஜே.சூர்யா நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமிக்க நடிகர் மற்றும் இயக்குநராக இருந்துவருபவர் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநராக புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார். அதில் இவரே நாயகனாகவும் நடிக்கும் விதத்தில் இப்படத்திற்கு கில்லர் (Killer)என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தொடங்கியிருந்த நிலையில், பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் நிமியில் இப்படத்தின் ஆக்ஷன் சண்டை காட்சிகள் சென்னையில் படப்பிடிக்கப்படுத்துவந்தது. இந்த ஷூட்டிங்கில் கேஸ் சிலிண்டர் வெடித்து கிட்டத்தட்ட 5-கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
அதில் மதன் (Madhan) என்னும் 25 வயது இளைஞர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரின் இழப்பிற்கு எஸ்.ஜே. சூர்யாவும் ஆழ்த்த இரங்கலை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரின் ககுடும்பத்திற்கு ரூ 10 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.




இதையும் படிங்க: இன்னும் 3 ஆண்டுகளில் கிராமத்தில் குடிபெயர பிளான் – விஜய் ஆண்டனி பேச்சு!
கில்லர் படப்பிடிப்பில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எஸ்.ஜே.சூர்யா நிதியுதவி:
கில்லர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றுவந்த நிலையில், ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுவந்தது. இந்த காட்சியின்போது கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நெருப்பு காட்சிக்காக இது பயன்படுத்தப்பட்ட நிலையில், அந்த சிலிண்டர் வெடித்து கிட்டத்தட்ட 5 பேருக்கு பலமான படுகாயம். அதில் சிகிச்சை பெற்றுவந்த மதன் என்பவர் சிகிச்சை பலனின்றி காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் குடும்பத்திற்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்திருந்த நிலையில், அவரின் குடும்பத்திற்கு எஸ்.ஜே.சூர்யா கிட்டத்தட்ட ரூ 10 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார். மேலும் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அட்லீயின் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்? – வைரலாகும் செய்தி!
எஸ்.ஜே.சூர்யா நிதியுதவி வழங்கியது குறித்து வைரலாகும் பதிவு:
#Killer – #SJSuryah has provided financial assistance of ₹10 lakhs to the family of Madhan, who recently lost his life in a fire accident at a shooting spot. Additionally, he has provided ₹5 lakhs for the medical treatment of Surya, who was injured in the accident. pic.twitter.com/zqh8PNDYHZ
— Movies Singapore (@MoviesSingapore) June 6, 2026
இந்த கோர விபத்தின் காரணமாக தற்போது கில்லர் திரைப்படத்தின் ஷூட்டிங் படத்தியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், இந்த சம்பவம் ஒட்டுமொத்த படக்குழுவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தின் இறுதியில் தொடங்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த படமானது 2026ம் ஆண்டு இறுதிக்குள் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாம். ஆனால் இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையாத நிலையில், ரிலீஸில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.