AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அட்லீயின் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்? – வைரலாகும் செய்தி!

Pradeep Ranganathan Joins Atlee Movie: தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் அட்லீ குமார். இவர் தற்போது அல்லு அர்ஜுனின் ராக்கா என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் அட்லீ தயாரிக்கும் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

அட்லீயின் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்? – வைரலாகும் செய்தி!
பிரதீப் ரங்கநாதன் மற்றும் அட்லீImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Jun 2026 18:46 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது பான் இந்திய பிரபல இயக்குநராக வளர்ந்திருப்பவர் அட்லீ குமார் (Atlee Kumar). இவரின் இயக்கத்தில் தமிழ், இந்தி மற்றும் தற்போது தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் உருவாகியிருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) நடிப்பில் உருவாகிவரும் ராக்கா (Raaka) என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் நிலையில், சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துவருகிறார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக தயாராகிவருகிறதாம். இயக்குநர் அட்லீ குமார் வெறும் இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளாராகவும் படங்களை தயாரித்துவருகிறார். இவரின் தயாரிப்பில் இறுதியாக இந்தியில் பேபி ஜான் (Baby John) என்ற படம் வெளியாகியிருந்தது.

இதையடுத்து தமிழில் விஜய் சேதுபதியை (VIjay Sethupathi) படம் ஒன்றையும் தயாரித்துவருகிறார். இந்நிலையில் இவர் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: எனக்கு என்னிடம் அந்த விஷயம் ரொம்பவே பிடிக்கும்.. அதுவே எனது பலம் – பூஜா ஹெக்டே!

இயக்குநர் அட்லீயின் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்:

பிரதீப் ரங்கநாதன் தற்போது, தயாரிப்பாளராக படம் ஒன்றை தயாரித்துவருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது இயக்கத்தில், தானே புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டு வருகிறாராம். இந்நிலையில் இவர், இயக்குநர் அட்லீ குமாரின் தயாரிப்பில் உருவாக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை.

இதையும் படிங்க: பிச்சைக்காரன் படம் போல நூறு சாமி படமும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் – இயக்குநர் சசி!

அட்லீ தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் குறித்து வைரலாகும் பதிவு:

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் இறுதியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படமானது வெளியாகியிருந்தது. இப்படமானது கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக இவர் தானே இயக்கி நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துவந்தது. இதையடுத்து அட்லீயின் தயாரிப்பில் புது படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறபடுகிறது. இன்னும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us