சியான் 63 படத்தில் இணைந்தார் சர்வம் மாயா பட நடிகை ரியா ஷிபு
Actress Riya Shibu joins the cast of Chiyaan 63 movie: மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சர்வம் மாயா. இந்தப் படத்தில் நாயகியாக நடித்து வரவேற்பைப் பெற்ற ரியா ஷிபு தற்போது சியான் 63 படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் வலம் வருபவர் ரியா ஷிபு. இவர் தென்னிந்திய மொழிகளில் மட்டும் இன்றி இந்தி சினிமாவிலும் படங்களை தயாரித்து உள்ளார். அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு முதல் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த ரியா ஷிபு கடந்த 2024-ம் ஆண்டு முதல் நடிகையாகவும் நடித்து வருகின்றார். அதன்படி இந்தி சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆன ரியா அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் படங்களை தயாரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன ரியா ஷிபு தற்போது தமிழ் சினிமாவிலும் நடிகையாக அறிமுகம் ஆக உள்ளார். இந்த நிலையில் நடிகை ரியா ஷிபு நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சர்வம் மாயா.
நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை ரியா ஷிபு நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகை ரியா ஷிபுவின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்கு பிறகு நடிகை ரியா ஷிபுவிற்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் நாளை நடிகை ரியா ஷிபு நடிப்பில் அதிரடி படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




சியான் 63 படத்தில் இணைந்தார் சர்வம் மாயா பட நடிகை ரியா ஷிபு:
தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகையாக வலம் வந்த நடிகை ரியா ஷிபு தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகிறார். அதன்படி நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாக உள்ள 63-வது படம் தான் சியான் 63. இந்தப் படத்தில் நடிகை ரியா ஷிபு நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் எழுதி இயக்க உள்ள நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். மேலும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… Karuppu: சூர்யாவின் கருப்பு பட FDFS காட்சிகள் எப்போது திரையிடப்படும்? – விவரங்கள் இதோ!
சியான் 63 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Adding fuel to the FLAME 🔥
Casting update on #Chiyaan63Delulu @riyashibu_ on board!
A film by @anandshank, on floors soon.@SathyaJyothi @chiyaan @Music_Santhosh @RDRajasekar @arjun1on @saisiddharth_ @PoornimaRamasw1 @shankaruppusamy @gopiprasannaa @aimsathishpro… pic.twitter.com/51c4Qxmfsn
— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 13, 2026
Also Read… கனவிலும் நினைக்கல வாழ்க்கதான் மாறுது ஓஓ… மூன்று ஆண்டுகளைக் கடந்தது மணிகண்டனின் குட் நைட் படம்!