AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கனவிலும் நினைக்கல வாழ்க்கதான் மாறுது ஓஓ… மூன்று ஆண்டுகளைக் கடந்தது மணிகண்டனின் குட் நைட் படம்!

3 Years Of Good Night Movie: தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான குட் நைட் படம் தற்போது மூன்று ஆண்டுகளைக் கடந்து உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கனவிலும் நினைக்கல வாழ்க்கதான் மாறுது ஓஓ… மூன்று ஆண்டுகளைக் கடந்தது மணிகண்டனின் குட் நைட் படம்!
குட் நைட் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 May 2026 18:23 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம்12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குட் நைட். இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரமேஷ் திலக்,
பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரைச்சல் ரபேக்கா, கௌசல்யா நடராஜன், உமா ராமச்சந்திரன், நிகிலா சங்கர், ஜெகன் கிருஷ்ணன், பிரியாலயா, ஸ்ரீ ஆர்த்தி, சைவம் கலா, விநாயக் சந்திரசேகரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் யுவராஜ் கணேசன், மகேஷ் ராஜ் பசிலியன் மற்றும் நஸரத் பாசிலியன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மூன்று ஆண்டுகளைக் கடந்தது மணிகண்டனின் குட் நைட் படம்:

இந்தப் படத்தில் ஐடி வேலை செய்துக்கொண்டு இருக்கும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த மணிகண்டனும் அம்மா அப்பா இல்லாமல் தனியாக வாழும் ஆடிட்டர் வேலை செய்யும் மீதாவும் ஒரு எதிர்பாராத நேரத்தில் சந்திக்கின்றனர். அந்த சந்திப்பு நட்பாக மாறி பிறகு காதலாகிறது. அதிக சத்தம் கேட்டாலே தாங்காத பெண்ணாக வாழும் மீத்தா தூங்கினாலே குரட்டை விடும் மணிகண்டனை திருமணம் செய்துகொண்ட பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. மிகவும் இயல்பாக மக்களுக்கு புரியும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Also Read… Director Bala: மமிதாவை நான் அடிச்சேனா.. அவர் எனது மகள் மாதிரி.. உண்மையை சொன்ன இயக்குநர் பாலா!

குட் நைட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்தை சூர்யா அண்ணாவால் மட்டுமே பண்ணமுடியும் – நடிகர் கார்த்தி புகழாரம்

Follow Us