AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jailer 2: ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ஜெயிலர் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Jailer 2 First Single Update: கோலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடங்களாக கதாநாயகனாகவே நடித்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் 172வது படமாக தயாராகியுள்ளதுதான் ஜெயிலர் 2. இதன் ஷூட்டிங் முடிந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து அப்டேட் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Jailer 2: ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ஜெயிலர் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ் தெரியுமா?
ஜெயிலர் 2 திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 May 2026 10:48 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) நடிப்பில் 172வது திரைப்படமாக மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நடித்துள்ளார். இந்த படமானது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை கிட்டத்தட்ட ரூ 600 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2026 ஏப்ரல் இறுதியில் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து ரஜினிகாந்த் புதிய படத்திற்காக காத்திருக்கிறார்.

இந்த ஜெயிலர் 2 படத்திற்கும் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ள நிலையில், முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அதன்படி ஜெயிலர் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 2026 ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளதாம், விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இரவும் பகலும் உழைக்கும் உங்கள் அன்பு.. நயன்தாராவிற்கு அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, மோகன்லால், விநாயகன், யோகி பாபு, சந்தானம், மிதுன் சக்கரவர்த்தி, மிர்னா மேனன் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு உச்ச நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அதிலும் இப்படத்தில் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் தோன்றுவதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் நடித்துள்ளாராம். இதில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்திருப்தாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சூர்யா சாரின் அந்த படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும் – சாய் அபயங்கர் பேச்சு!

இந்த படமானது ஒரு பிக் ஸ்டார்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல் ஷூட்டிங் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இருக்கும் நிலையில், இப்படத்தை வரும் 2026 ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us