AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Karuppu: நீதி காக்க வந்திறங்கிய கருப்பன்.. ஆக்ஷன் அதிரடியுடன் வெளியானது சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லர்!

Karuppu Movie Action Packed Trailer: சினிமாவில் உச்ச நடிகர்கள் லிஸ்டில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் 45வது படமாக வெளியீட்டிற்கு தயாராகியுள்ளதுதான் கருப்பு. இப்படம் வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் இன்று 2026 மே 10ம் தேதியில் இப்படத்தின் அதிரடி ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Karuppu: நீதி காக்க வந்திறங்கிய கருப்பன்.. ஆக்ஷன் அதிரடியுடன் வெளியானது சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லர்!
கருப்பு திரைப்பட டிரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 May 2026 20:21 PM IST

நடிகர் சூர்யா (Suriya) மற்றும் திரிஷா கிருஷ்ணனின் (Trisha Krishnan) கூட்டணி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மீண்டும் இணைந்துள்ள படம்தான் கருப்பு. இந்த படத்தை இயக்நகுரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி ( RJ Balaji) இயக்க தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் சூர்யா45 (Suriya45) என்று தற்காலிக டைட்டிலுடன் அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் தொடங்கியிருந்தது. இந்த படத்தில் சூர்யா, திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் வழக்கறிஞர்களாகவே நடித்துள்ளனர். அந்த விதத்தில் சூர்யா இப்படத்தின் கருப்பசாமியாகவும் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையில் காட் மோட், ராத்து ராசன், நாங்க நாலுபேரு மற்றும் கருப்பா கூட வா என மொத்தம் 4 பாடல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இப்படத்தில் 3 பாடல்கள் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இன்று (10/06/2026) இப்படத்தின் அதிரடி ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சராக பதவியேற்ற விஜய்.. கொண்டாடி தீர்த்த சன் டிவி சீரியல் நடிகர்கள்!

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இதையும் படிங்க: அவர் கொடுத்த முதல் வாய்ப்பு.. நான் சினிமாவில் இந்த நிலையில் இருக்க விஜய் அண்ணன்தான் காரணம் – நடிகர் ஜெய் பேச்சு!

கருப்பு திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த கருப்பு படத்தில் தனது பிரச்சனைக்கு நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் மக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றும் வக்கீலாக ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். மேலும் அவருக்கு எதிர் தரப்பு வக்கீலாக த்ரிஷா இருக்கிறார். நீதிக்காக கருப்பனை வேண்டிய பக்தருக்காக, சூர்யா கருப்பானாக வந்து இறங்கி நீதியை வாங்கிக்கொடுக்கும் கதையாக தெரிகிறது. அந்த வகையில் இந்த ட்ரெய்லரின் இறுதி காட்சியில் யாரோ ஒருவர் கருப்பசாமி வேடத்தில் இருப்பதுபோல இருக்கிறது. அது சூர்யாவா?, இல்லையா என்பது படம் வெளியானால்தான் தெரியும்.

கருப்பு திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங்:

சூர்யாவின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ படமானது வெளியானது. இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு வெளியாகி கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதையடுத்து இந்த் 2026ம் ஆண்டில் முதலில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் கருப்பு. அந்த வகையில் இந்த கருப்பு படமானது சூர்யாவிற்கு சிறப்பான வரவேற்பை கொடுக்கும் படமாக அமையும் என கூறப்படுகிறது. இப்படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று மாலை 4 மணிமுதல் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இதுவரை அதிகமாக டிக்கெட் புக் செய்யப்பட்டதாக வட்டாரங்கள் கூறுகிறது. இந்நிலையில் நிச்சயம் இப்படம் சூர்யாவிற்கு வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us