AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதல் என்பது ஒருமுறை மட்டுமே நிகழுவது இல்லை – தமன்னா பாட்டியா

Tamannaah Bhatia talks about Love : பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா பாட்டியா. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் காதல் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

காதல் என்பது ஒருமுறை மட்டுமே நிகழுவது இல்லை – தமன்னா பாட்டியா
தமன்னா பாட்டியாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 May 2026 17:24 PM IST

நடிகை தமன்னா பாட்டிய பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார். இந்தி சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன நடிகை தமன்னா பாட்டிய அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முதன் முறையாக நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலமாகவே மக்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா நாயகி அவதாரத்தை எடுத்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிகை தமன்னா பாட்டியா பலப் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் பிசியான நடிகையாம வலம் வரும் தமன்னாவின் சொந்த வாழ்க்கை குறித்த செய்திகளும் அவ்வபோது வெளியாகி வருகின்றது. அதன்படி நடிகை தமன்னா பாட்டியாவின் காதல் வாழ்க்கை தொடர்பான கிசுகிசுக்கள் அதிக அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதல் குறித்து நடிகை தமன்னா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காதல் என்பது ஒருமுறை மட்டுமே நிகழுவது இல்லை:

காதல் என்பது ஒருமுறை மட்டுமே நிகழும் ஒன்றல்ல; அது பலமுறை நிகழக்கூடும். இன்றைய உலகில், காதல் மற்றும் உறவுகள் என்பவற்றின் உண்மையான பொருள் என்ன என்பது குறித்துப் பலரும் குழப்பமடைந்துள்ளனர். காதல் என்பது ஒரு பரிவர்த்தனையாக மாறிவிடும் அபாயம்கூட இன்று நிலவுகிறது.

நீங்கள் ஒருவரை உண்மையாகவே நேசிப்பீர்களெனில், அவர்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களையோ எதிர்பார்ப்புகளையோ மற்றவர் மீது திணிப்பதன் மூலம் காதலை ஒருபோதும் நிரூபித்துவிட முடியாது. காதல் என்பது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நிகழும் அனுபவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது பலமுறை தோன்றக்கூடிய ஓர் உணர்வாகும். அந்த உணர்வு வெளிப்புறக் காரணிகளால் உருவாவதல்ல; மாறாக, அது நம்முடைய அகத்திலிருந்து, நமக்குள்ளிருந்தே பிறப்பதாகும் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மமிதா பைஜூவை அப்போதே இரண்டு வானம் படத்திற்காக ஒப்பந்தம் செய்தோம்- இயக்குநர் ராம் குமார் பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

Follow Us