மமிதா பைஜூவை அப்போதே இரண்டு வானம் படத்திற்காக ஒப்பந்தம் செய்தோம்- இயக்குநர் ராம் குமார் பேச்சு!
Mamitha Baiju Irandu Vaanam: மலையாள சினிமாவிலிருந்து தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்துவருபவர் நடிகை மமிதா பைஜூ. இவர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இரண்டு வானம் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்திற்காக இவர் எப்போது ஒப்பந்தமானார் என்பது குறித்து இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் இயக்குநராக பிரபலமானவர் ராம்குமார் (Ram Kumar). இவர் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலை (Vishnu Vishal) வைத்து 2 படங்களை இயக்கியிருந்த நிலையில், 3வது இணைந்திருந்த படம்தான் இரண்டு வானம் (Irandu Vaanam). இந்த படமானது ஒரு வித்தியாசமான காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இதில் விஷ்ணு விஷால் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர் இந்த படத்தில் இதுவரையில் எதிர்பார்க்காத வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் ஏற்கனவே டியூட் (Dude) மற்றும் கர (Kara) போன்ற படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இவரின் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகியுள்ள படம்தான் இரண்டு வானம். இந்த படத்தில் மமிதா பைஜூ எவ்வாறு கதாநாயகியாக ஒப்பந்தமானார். இந்த படத்தின் கதையை கேட்டபோது மமிதாவின் ரியாக்ஷன் என்ன என்பது குறித்து இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… எச்சரிக்கை கொடுத்த சிவகார்த்திகேயன்!
இரண்டு வானம் படத்தில் மமிதா ஒப்பந்தமானது எப்படி:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ராம்குமார் பேசுகையில், “நடிகை மமிதா பைஜூ, அவர் பிரேமலு படம் பண்ணிக்கொண்டிருக்கும்போதே, இரண்டு வானம் படத்திற்காக ஒப்பந்தம் செய்தோம். இப்படமானது எங்களின் ஷூட்டிங் காரணமாக சில தாமதங்கள் ஏற்பட்டிருந்தது. இப்படத்தின் கதை மமிதா பைஜூவிற்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவருக்கு இக்கதை பிடித்திருந்ததாக என்னிடம் கூறியபோது, அவருடைய கண்களில் இருந்த பிரகாசத்தை என்னால் பார்க்கமுடிந்தது. இந்த இரண்டு வானம் படம் வெளியாகுவதற்கு முன்பே, மமிதா பைஜூ மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார்” என அதில் இயக்குநர் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கருப்பு ட்ரெய்லர் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட் – வைரலாகும் தகவல்
இரண்டு வானம் படத்தின் முதல் சிங்கிள் குறித்து மமிதா பைஜூ வெளியிட்ட பதிவு:
First single 🦋✨ https://t.co/L3kf6iESBP
— Mamitha Baiju (@_mamithabaiju) April 25, 2026
இந்த இரண்டு வானம் படமானது ஒரு வித்தியாசமான காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. முழுவதும் மலை கிராமத்தில் நடக்கும் ஒரு கதையை அடிப்படியாக வைத்த இயக்கப்பட்டுள்ளது. இப்படமானது 2026 ஆண்டு கோடைக்காலத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



