AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

300 மில்லியன் பார்வைகளைக் கடந்தது மோனிகா லிரிக்கள் வீடியோ

Monica Lyric Video From Coolie Movie | தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்தப் படத்தில் இருந்து வெளியான மோனிகா பாடலின் லிரிக்கள் வீடியோ 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

300 மில்லியன் பார்வைகளைக் கடந்தது மோனிகா லிரிக்கள் வீடியோ
மோனிகாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 May 2026 19:01 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் வில்லனாக நடிகர் நாகர்ஜுனா நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், சௌபின் ஷாகீர், உபேந்திரா ராவ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் வில்லன் நாகர்ஜுனாவால் கொலை செய்யப்படுகிறார். அவரை பழி வாங்குவதற்காக சத்யராஜின் மகள் மற்றும் நண்பர் ரஜினிகாந்த் இருவரும் திட்டமிடுகின்றனர். இதில் அவர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதே படத்தின் கதை. மேலும் இந்தப் படத்தின் மூலம் நாகர்ஜுனாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்று தற்போதைய இளைஞர்களும் புரிந்து கொண்டனர்.

மேலும் நடிகர் ரஜினிகாந்தின் டீ ஏஜிங் காட்சிகள் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள நிலையில் அதனை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவடைய உள்ள நிலையில் புது சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதனை படக்குழு கொண்டாடி வருகின்றது.

300 மில்லியன் பார்வைகளைக் கடந்தது மோனிகா லிரிக்கள் வீடியோ:

அதன்படி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மோனிகா பெல்லூச்சி என்ற பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை  விஷ்ணு எடவன் எழுத பாடகர்கள் சுபலாஷினி, அனிருத் ரவிச்சந்தர், அசால் கோலார் ராப் பாடியுள்ளார். இந்தப் பாடம் தற்போது யூடியூபில் சுமார் 300 மில்லியன்களுக்கு அதிகமாக பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… நடிகர் மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல் – என்ன ஆச்சு தெரியுமா?

கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இறுதியாக என்னிடம் கேட்டது… ரஜினிகாந்த் சொன்ன விசயம்

Follow Us