AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இறுதியாக என்னிடம் கேட்டது… ரஜினிகாந்த் சொன்ன விசயம்

Superstar Rajinikanth talks about producer R.B.Choudry | தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த ஆர்.பி.சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இறுதியாக என்னிடம் கேட்டது… ரஜினிகாந்த் சொன்ன விசயம்
ஆர்.பி.சௌத்ரி - ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 07 May 2026 12:59 PM IST

ராஜஸ்தானை சொந்த ஊராக கொண்டவர் தயாரிப்பாளர் ஆ.பி.சௌத்ரி. இவர் முதன்முறையாக மலையாள சினிமாவில் படங்களை தயாரிக்க தொடங்கினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்களை தயாரிக்க தொடங்கினார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து உள்ளார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து உள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை அறிமுகம் செய்துள்ளார். பலரின் சினிமா வாழ்க்கைக்கு தொடக்கப் புள்ளியாக ஆர்.பி.சௌத்ரி  இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆர்.பி.சௌத்ரி கடந்த 05-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு ராஜஸ்தானில் சொந்த ஊருக்கு சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த செய்தி வெளியாகி அவரது குடும்பத்தினரை மட்டும் இன்றி திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டுவரப்பட்ட நிலையில் பிரபலங்களும் ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில் ஆர்,பி.சௌத்ரி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

100-வது படத்தில் என்னை நடிக்க சொன்னார் ஆர்.பி.சௌத்ரி:

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நான் இதற்கு முன் அவருடன் எந்தப் படமும் நடித்ததில்லை. ஜெயிலர் 2 படப்பிடிப்பின்போது அவர் என்னை அழைத்து, ‘நான் இதுவரை 99 படங்கள் நடித்திருக்கிறேன். எனது 100-வது படத்துடன் நான் ஓய்வு பெறப்போகிறேன்; அந்தப் படத்தில் நீதான் என்னுடன் நடிக்க வேண்டும்,’ என்று கூறினார். அதற்கு நான், ‘நிச்சயமாக, 100 சதவீதம் நான் அதில் நடிக்கிறேன்,’ என்று பதிலளித்தேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

Also Read… மே மாதம் இறுதியில் வெளியாகும் ஜன நாயகன் படம்? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த் பேச்சு:

Also Read… 29 படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Follow Us