AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மண்டாட்டியில் நடிகர் சூரியின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? வைரலாகும் தகவல்

Actor Soors Mandaadi Movie Character Is Viral On Social Media | தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மண்டாட்டி. இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மண்டாட்டியில் நடிகர் சூரியின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? வைரலாகும் தகவல்
மண்டாட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 May 2026 16:13 PM IST

தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடிப்பதன் மூலம் சினிமாவில் காலடி வைத்தவர் நடிகர் சூரி. தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் சூரி பிறகு காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து காமெடி நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார் நடிகர் சூரி. அதன்படி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும். அதன்படி நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விஷால் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். அதில் அதிக்கப்படியாக நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்து இருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் சூரி.

அதன்படி நடிகர் சூரி தற்போது தொடர்ந்து படங்களில் நாயகனாகவே நடித்து வருகிறார். தொடர்ந்து இவர் நாயகனாக நடித்து வரும் படங்கள் அனைத்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகாவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது நாயகனாக நடித்து உள்ள மண்டாட்டி படத்தில் அவரது கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மண்டாட்டியில் நடிகர் சூரியின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்?

அதன்படி நடிகர் சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம், இதுவரை ரசிகர்கள் கண்டிராத முற்றிலும் புதிய பரிமாணத்தில் அவரை வெளிப்படுத்தும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இது ஒரு தனித்துவமான மற்றும் மாறுபட்ட வகையிலான திரைப்படமாக அமையும். இப்படத்தில் சூரி இரண்டு விதமான தோற்றங்களில் தோன்றுகிறார் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

Also Read… கோலிவுட் முதல் பாலிவுட் வரை… தளபதி விஜய்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… SA Chandrasekhar: விஜய் நிச்சயம் மக்களுக்காக பெரிய மாற்றத்தை கொண்டுவருவார் – எஸ்.ஏ.சந்திரசேகர்!

Follow Us