தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதற்கு நிஜமான காரணம் இதுதான் – சுந்தர் சி ஓபன் டாக்
Sundar C Talks About Thalaivar 173 Movie: இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி சமீபத்தில் தலைவர் 173 படத்தில் கமிட்டாகி பிறகு அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நாயகனாகவும் ரசிகர்களிடையே பிரபலமானவராக இருக்கிறார் சுந்தர் சி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து படங்களை இயக்கி நடித்து வரும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சி பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் உடன் இணைந்து படம் செய்வதாக அறிவிப்பு வெளியானது. இவர்களின் கூட்டணி முன்னதாக அருணாச்சலாம் படத்தில் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. மேலும் இயக்குநர் சுந்தர் சி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் படத்தில் இருந்து விலகுவது தொடர்பாக சரியான விளக்கம் இல்லாததால் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது சுந்தர் சி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.




தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதற்கு நிஜமான காரணம் இதுதான்:
இந்த நிலையில் சுந்தர் சி சமீபத்தில் பேட்டியில் பேசியதவது, உண்மையைச் சொல்லப்போனால், அது எனக்கு அளவுக்கு அதிகமான அழுத்தமாக இருந்தது. கடந்த 16 ஆண்டுகளாக, பார்வையாளர்களிடம் எவை எடுபடும் என்று நான் உணர்ந்தேனோ, அதன் அடிப்படையில் எனக்கு விருப்பமான விதத்திலேயே நான் திரைப்படங்களை உருவாக்கி வந்துள்ளேன்.
ஆனால், படப்பிடிப்புப் பணிகள் நடைபெறும் சமயத்தில், இந்த விஷயத்தை மற்றவர்களுக்குப் புரியவைக்கும் ஆற்றல் என்னிடம் இல்லை. ஒரு திரைப்படத்தின் கதையைச் சிறப்பாக விவரிப்பது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை; அதே சமயம், எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், மிக எளிதாகவே நான் சமரசத்திற்கு உட்பட்டுவிடுகிறேன்.
எனவே, இது போன்ற ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை நான் உருவாக்க முற்பட்டால், அதில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் என்னுடையதாக மட்டுமே இருக்காது. அந்த அழுத்தத்தை நான் உணர்ந்தேன்; அத்துடன், அந்தத் திட்டத்திற்கோ அல்லது அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கோ என்னால் முழுமையாக விசுவாசமாக இருக்க இயலாது என்பதையும் நான் உணர்ந்துகொண்டேன். அதனால்தான், மிக ஆரம்ப நிலையிலேயே நான் அந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… GVM: என் தொழில் வாழ்க்கையை அழிக்க சிலர் முயன்றனர் – திடீரென கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட பதிவு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SundarC about Leaving #Thalaivar173:
• To be honest, it was too much pressure for me. For the past 16 years, I’ve made films the way I wanted, based on what I felt would work with the audience.
• But I don’t have the capacity to make people understand this during production.… pic.twitter.com/FWV8Yfm5QF
— Laxmi Kanth (@iammoviebuff007) May 2, 2026
Also Read… ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியானது பிரித்விராஜ் சுகுமாரின் ஐ நோபடி பட டீசர்