GVM: என் தொழில் வாழ்க்கையை அழிக்க சிலர் முயன்றனர் – திடீரென கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட பதிவு!
Gautham Vasudev Menon: தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரின் துருவ நட்சத்திரம் படமானது பல ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில், இதன் இறுதித் தீர்ப்பில் வெளியீட்டிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. அது குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர்தான் கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon). இவர் தற்போது திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். இவரின் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டிலே வெளியாகும் என அறிவித்திருந்த திரைப்படம்தான் துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram). இதில் சியான் விக்ரம் (Chiyaan Vikram) லீட் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் பிரச்சனைகள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பிக்கப்பட்டு பலமுறை தள்ளிபோகியிருக்கிறது. அந்த விதத்தில், இப்படத்தின் வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் (Chennai High Court) நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் கடந்த 2026 ஏப்ரல் 30ம் தேதியில் இப்படத்தின் இறுதிவழக்கு விசாரிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்திருந்தார். இப்படத்தை வரும் ஜூன் 15ம் தேதிக்குள் வெளியிட தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் இப்படத்தின் வழக்கு குறித்தும், தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: பர்த் டே ஸ்பெஷெல் – வெளியான அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டைட்டில் டீசர்
துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் பிரச்சனைகள் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் அறிக்கை பதிவு:
View this post on Instagram
இந்த பதிவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “நூற்றுக்கும் மேற்பட்டோரின் உழைப்பில் உருவான என் திரைப்படத்தை வெளியிட விடாமல் தடுத்து, என் தொழில் வாழ்க்கையை அழிக்க சிலர் முயன்றனர். ஆனாலும், எனது சட்ட ஆலோசகர் மற்றும் மூத்த வழக்கறிஞர் அப்துல் ஹமீத், முன்னேறிச் செல்ல ஒரு வழி காட்டினார். அந்த வழியை நோக்கி என்னை வழிநடத்தினார். இப்போது, மிகவும் முக்கியமானவரான நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் எனக்கு வழி வகுத்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ‘அம்மா அம்மாதான்’ பாடல் வெளியீடு!
இறுதியாக, சுரங்கப்பாதையின் முடிவில் ஒளி தெரிகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட நிதிகளுடன் அரிதாகவே இருக்கும் ஒரு துறையில், சிக்கித் தவிக்கும் எந்தவொரு திரைப்படத்திற்கும், துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வெளியிடப் பிறப்பிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு ஒரு முன்மாதிரியாக அமையும். இங்கிருந்து மேலும் மேலும் முன்னேறிச் செல்வோம்” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.