ரியோ ராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் டைட்டில் இதுவா? – அறிவிப்பு வீடியோ இதோ!
Rio Raj production Movie: தமிழில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரியோ ராஜ். இவர் தற்போது தயாரிப்பாளராகவும், ரிவர் ரூட் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் கீழ் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சின்னத்திரையில் இருந்து சினிமாவில் நுழைந்து, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ரியோ ராஜ் (Rio Raj). இவரின் நடிப்பில் இறுதியாக ஆண்பாவம் பொல்லாதது என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. அந்த வகையில் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன், புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். ரிவர் ரூட் ஸ்டூடியோஸ் (River Route Studios) என்ற புது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்த நிறுவனத்தில் ரியோ ராஜின் கீழ் பல்வேறு பிரபலங்களும் இணைந்து முதலியிட்டு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கீழ் புதிதாக திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தின் இயக்குநர் யார்?, நடிகர் யார்? மற்றும் டைட்டில் என்ன என்பது குறித்த அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் கீழ் உருவாகும் புதிய படத்திற்கு, படக்குழு “ப்ரவுன் மணி” (Brown Mani) என டைட்டில் வைத்துள்ளது. தற்போது இதுகுறித்த அறிவிப்பு வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கருப்பு படத்தின் சென்சார் இப்படிதான் அமைந்தது – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்
ரியோ ராஜ் வெளியிட்ட ப்ரவுன் மணி படத்தின் அறிவிப்பு வீடியோ பதிவு:
Every story has a name, #BrownMani is ours.
🔗 https://t.co/BAeKT5sriz
Revealing the title of our first production with our Lazy but Pro Active crew ♥️ Get ready for a fun chase!
First look today at 5pm. @rio_raj @rrs_team @Im_Kavi @DevPrakash2816 @ram_nishanth @ProRekha— Rio raj (@rio_raj) May 1, 2026
ரியோ ராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கதிரவன் சம்பத் என்பவர் இயக்கிவருகிறார். இவர் இதற்கு முன் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்ஹா வகையில் இப்படத்தில் அறிமுக நடிகரும், யூடியூபருமான ராம் நிஷாந்த் என்பவர் நாயகனாக நடித்துவருகிறார். இந்த படமானது கிராமத்து கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், இன்று 2026 மே 1ம் தேதியில், உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பு பதிவு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள மம்முட்டி – மோகன்லால்… எப்படி இருக்கு பேட்ரியாட் படம்? எக்ஸ் விமர்சனம் இதோ!
இப்படமானது ரியோ ராஜின் தயாரிப்பில் முதல் திரைப்படமாக தயார்க்கிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும் இந்த படத்தில் பல அறிமுக நடிகர்களும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரவுன் மணி படமானது கலக்கல் கிராமத்து நகைச்சுவை திரைப்படமாக தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. தற்போது தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர்களுக்கும் நல்ல வரவேற்புகள் கிடைக்கும் நிலையில், ப்ரவுன் மணி படமானது வெற்றி படமாக அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.