AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்25-க்கு ரூ.15,000 தள்ளுபடி.. ப்ரீடம் சேலுக்கு முன்னதாகவே இன்ப அதிர்ச்சி கொடுத்த அமேசான்!

Samsung Galaxy S25 Smartphone Gets 15000 Rupees Discount | அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ப்ரீடம் சேலை நாளை (ஆகஸ்ட் 07, 2026) தொடங்க உள்ளன. இந்த நிலையில், அமேசான் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000 தள்ளுபடி வழங்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25-க்கு ரூ.15,000 தள்ளுபடி.. ப்ரீடம் சேலுக்கு முன்னதாகவே இன்ப அதிர்ச்சி கொடுத்த அமேசான்!
சாம்சங் கேலக்ஸி எஸ்25
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Aug 2026 22:41 PM IST

ஆகஸ்ட் 15, 2026 அன்று இந்தியா தனது 60வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனங்களான அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) ஆகியவை சேலை அறிவிக்க உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் சேலும் நாளை (ஆகஸ்ட் 07, 2026) தொடங்க உள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவளுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில், சேலுக்கு முன்னதாக அமேசான் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனுக்கு (Samsung Galaxy S25 Smartphone) சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. அதாவது அந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்களுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் வழங்கும் சிறப்பு தள்ளுபடி குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 – அமேசானில் சிறப்பு சலுகை

12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.74,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடியுடன் வெறும் ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சுமார் ரூ.15,000 வரையிலான் தள்ளுபடியுடன் அந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஸ்மார்ட்போன் ரூ.87,999-க்கு அறிமுகமான நிலையில், தற்போது வெறும் ரூ.73,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : தஞ்சையில் நம்மாழ்வார் பெயரில் கல்லூரி.. விவசாயிகளுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள்!

தற்போது வாங்கலாமா அல்லது சேலுக்கு காத்திருக்கலாமா?

அமேசான் நிறுவனத்தின் சேல் நாளை (ஆகஸ்ட் 07, 2026) தொடங்க உள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் அசத்தல் தள்ளுபடிகளை வழங்க உள்ளது. தற்போது இருக்கும் விலையை விடவும் சேலில் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, காத்திருந்து சேலில் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்து வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : விவசாய பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்.. எடப்பாடி பழனிசாமி!

இது தவிர மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் அமேசான் சேலில் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us