AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SJ Suryah: விரைவில் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதை விஜய் சார் கையால் பெற வேண்டும் – எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி பதிவு!

Thalapathy Vijays Political Triumph: தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர், தளபதி விஜய் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், அவரை வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

SJ Suryah: விரைவில் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதை விஜய் சார் கையால் பெற வேண்டும் – எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி பதிவு!
எஸ்.ஜே. சூர்யா மற்றும் தளபதி விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 May 2026 17:48 PM IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் எஸ்.ஜே.சூர்யா (SJ.Suryah). இவர் தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இறுதியாக, கடந்த 2026 ஏப்ரல் தொடக்கத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (love Insurance Kompany) படத்திலும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இந்த படத்திற்கு பிறகு தெலுங்கிலும் சரி, தனது இயக்கத்திலும் சரி புதிய திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படத்தை இயக்கிவரும் நிலையில், அதில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கு கில்லர் (Killer) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்துவருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) தவெக கட்சியானது (TVK Party) அதிக வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் நிலையில், விஜயை வாழ்த்தில் தனது எக்ஸ் பக்கத்தில் சுவாரஸ்ய பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இன்னும் 30 நாட்களில்… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ராம் சரணின் பெடி படக்குழு!

தளபதி விஜய்யின் வெற்றியை வாழ்த்தி இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் எஸ்.ஜே.சூர்யா, “நாம் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது தமிழ்நாடு அரசின் முன்னணி நடிகர் விருதை விரைவில் உங்களின் கைகளால் பெறவேண்டும் என உங்களிடம் சொன்னேன் சார். என் பேச்சில் பாதி உண்மையாகிவிட்டது. இப்போது உங்களிடமிருந்து அந்த விருதை பெற, நான் சிறந்த முன்னணி நடிகர் என்பதை நிரூபிக்க கடினமாக உழைக்கவேண்டும் நண்பா சார். விஜய் சார் , இந்த மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்கள். நான் இப்போது ரொம்ப குஷியாக இருக்கிறேன் சார்” என அதில் அவர் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: டாக்ஸிக் படத்தில் யாஷுடனான நெருக்கமான காட்சிகளை நீக்க சொன்னேனா? அதிரடி பதிலை கொடுத்த கியாரா அத்வானி!

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது இயக்கத்தில் உருவான 2வது படத்தையே விஜயை வைத்துதான் இயக்கியிருந்தார். அந்த படம்தான் குஷி என எல்லாருக்குமே தெரியும். இதையடுத்து சில படங்களில் நடிகராகவும், விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். மெர்சல், வாரிசு போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு படத்தோடு விஜய் அரசியல் வருவதற்கு உறுதியாக இருந்த நிலையில், அதிலிருந்தே அவரின் அரசியல் பணிகளும் தீவிரமாக தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக டெப்பாசிட்டுகளை பிடித்து தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக இருந்து விஜய் தற்போது தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us