SJ.Suryah: எப்போது திருமணம்? எஸ்.ஜே.சூர்யா சொன்ன கலகல பதில்!
SJ Suryah Abour His Marriage Plans: சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது அதிரடி வில்லனாக அசத்தி வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவரின் நடிப்பில் தொடர்ந்து படங்கள் உருவாகி வருகிற்து. இந்நிலையில், இவருக்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, அவர் சொன்ன ஆச்சர்ய பதில் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் அதிரடி வில்லனாக அசத்தி வருபவர் எஸ்.ஜே.சூர்யா (SJ.Suryah). தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது நடிகராகவும் மற்றும் வில்லனாகவும் அசத்தி வருகிறார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா, தமிழில் அஜித் குமாரின் (Ajith Kumar) வாலி (Vaalee) என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) குஷி (Kushi) போன்ற படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார். அந்த வகையில், தனது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான நியூ (New) என்ற படத்தின் மூலமாகவே, தன்னையும் நடிகராக அறிமுகப்படுத்திக்கொண்டார், தொடர்ந்த படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வந்தார். மேலும் இவர் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழி படங்களில் சிறந்த வில்லனாக நடித்து வருகிறார். இவரின் இயக்கத்திலும் தளபதி விஜய்யின் நடிப்பிலும் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் குஷி (Kushi).
இப்படமானது வரும் 2025 செப்டம்பர் 25 ஆம் தேதியன்று ரீ -ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா கலந்துகொண்டார். அதில் எஸ்.ஜே.சூர்யாவிடம், உங்களுக்கு திருமணம் எப்போது என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு எஸ்.ஜே.சூர்யா சொன்னது பற்றி தெளிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : இந்தி படங்களில் வரிசையாக கமிட்டாகும் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன்!
திருமணம் குறித்து எஸ்.ஜே.சூர்யா சொன்ன கருத்து
குஷி படத்தின் ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா, மேடையில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவரிடம், குஷி படத்தின் 2வது பாகம் வருமா? என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு எஸ்.ஜே.சூர்யா, “குஷி படம் இறைவன் அமைத்த படம், அதுபோன்ற நிலையில் மீண்டும் ஒரு படம் அமைந்தால் பார்க்கலாம். தற்போது எனது முழு கவனம் எல்லாம் நடிப்பின் மீது தான் இருக்கிறது. நான் என்றைக்குமே ஒரு நல்ல நடிகராகவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். நான் இயக்குனரானதே நடிப்பதற்காகத்தான்” என்றும் எஸ்.ஜே.சூர்யா அதில் பேசியிருந்தார்.
இதையும் படிங்க : ரூ 100 கோடி வசூல்.. ‘மதராஸி’ படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு.. வைரலாகும் புகைப்படம்!
மேலும் அவரிடம் அந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு திருமணம் எப்போது, இப்படி முரட்டுகாளையாகவே சுற்றுகிறீர்களே ? என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, “நான் ஒரு சுதந்திர பறவை. அப்படியே இருந்துவிடுகிறேன், என்னை விட்டுவிடுங்கள்” என்று அந்த நிகழ்ச்சியின்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியிருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட அதிரா படத்தின் முதல் பார்வை பதிவு :
Very excited to feel and live in #PVCU sir 🥰🙏sjs & congrats @IamKalyanDasari sir for Ur launch as #Hero 🥰🔥👍🙌 https://t.co/2p6oGm43MS
— S J Suryah (@iam_SJSuryah) September 22, 2025
நடிகர் எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் அதிரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அறிமுக ஹீரோ கல்யாண் தசாரி நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் எஸ்.ஜே.சூர்யா அசத்தல் வில்லனாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.