AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

Chiyaan 63 Movie Shooting Update Viral On Social Media : நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக சியான் 63 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்க உள்ளது என்று அப்டேட் வெளியாகி உள்ளது,

சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
சியான் 63Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 May 2026 21:30 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். சினிமாவில் வய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகம் ஆன இவர் பிறகு நடிகராக நடிக்கத் தொடங்கினார். இவரது நடிப்பில் ஆரம்ப காலக்கட்டத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திறையிலும் தொடர்ந்து நடித்து வந்தார். பிறகு தனது கடின உழைப்பின் காரணமாக தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து இவர் ஒவ்வொரு படத்திற்கு போடும் கடின உழைப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் நடிகர் சியான் விக்ரமின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான வீர தீர சூரன் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் தனது 63-வது படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?

‘Chiyaan63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக, சியான் விக்ரம் சுமார் 50 முதல் 60 நாட்கள் வரையிலான கால்ஷீட்டை (call sheet) ஒதுக்கியுள்ளார். இப்படத்தின் மூலம், ரியா ஷிபு நடிகையாகத் தனது தமிழ்த் திரையுலக அறிமுகத்தைச் செய்கிறார். அவர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இருப்பினும், அவர்தான் படத்தின் கதாநாயகி அல்ல. இவர்களைத் தவிர, ஊர்வசி மற்றும் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஒரு தனித்துவமான மற்றும் மாறுபட்ட பாணியிலான திரைப்படமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சியான் விக்ரம் தற்போது சில விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

Also Read… Jiiva: நான் ஹீரோவாகும் முன்னே அந்த வேலைதான் பார்த்தேன் – நடிகர் ஜீவா பகிர்ந்த விஷயம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சமூக வலைதளத்தில் மூழ்கடிக்கப்படும் சமூகம்… காதலை முடிவு செய்யும் மீட்டர்… ஓடிடியில் வெளியாகி உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் விமர்சனம் இதோ

Follow Us