AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சமூக வலைதளத்தில் மூழ்கடிக்கப்படும் சமூகம்… காதலை முடிவு செய்யும் மீட்டர்… ஓடிடியில் வெளியாகி உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் விமர்சனம் இதோ

Love Insurance Kompany Movie OTT Review | நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருதியாக திரையரங்குகளில் வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம். இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

சமூக வலைதளத்தில் மூழ்கடிக்கப்படும் சமூகம்… காதலை முடிவு செய்யும் மீட்டர்… ஓடிடியில் வெளியாகி உள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் விமர்சனம் இதோ
லவ் இன்சூரன்ஸ் கம்பெனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 May 2026 21:50 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தினை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் பணிகளை 2018-ம் ஆண்டே தொடக்கி இருந்தாலும் அடுத்தடுத்து பல காரணங்களால் படத்தின் பணிகள் தொடங்கவே தாமதம் ஆனது. முன்னதாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. ஆனால் அந்த கூட்டணி அமையவில்லை அதனைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனை நாயகனாக வைத்து படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

அதன்படி நடிகர் எஸ்.ஜே.சூர்யா நெகட்டிவ் கதாப்பாதிரத்திலும் நடிகர் சீமான் பிரதீப் ரங்கநாதனின் அப்பா கதாப்பாத்திரத்திலும் நடித்து இருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, மாளவிகா, கௌரி கிஷன் மற்றும் ஷா ரா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை என்ன?

படம் தொடங்கும் போதே 2040-ம் ஆண்டில் தொடங்குவதாக காட்டப்படுகின்றது. இந்த காலத்தில் வாழும் மக்கள் அனைவரும் லைக் என்று அழைக்கப்படும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று அழைக்கப்படும் சமூக வலைதள ஆப்பை சார்ந்தே வாழ்கின்றனர். இதில் லைக்ஸ் வாங்கவேண்டும் என்றும் அதிக ஃபாளோவர்ஸ்களை பெருவது மட்டும் இன்றி தங்களுக்கு ஏற்ற துணையை கண்டுபிடிக்கவும் உதவுகிறது. இந்த ஆப்பை கண்டு பிடித்ததே எஸ்.ஜே.சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சமூக வலைதளத்தில் அடிமையாக மூழ்கி கிடக்கும் மக்கள் தவறு செய்யும் போது பசுமை உலகம் என்ற ஜெயிலில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு எந்தவிதமான நெட்வொர்க் மற்றும் மொபைல் என எதுவும் இருக்காது. இதனை சீமான் தான் கவனித்து கொள்கிறார். அவரது மகன் பிரதீப் ரங்கநாதனும் அப்படியே வாழ்கிறார்.

Also Read… இன்று பூஜையுடன் தொடங்குகிறது கார்த்தியின் தெலுங்கு படம்

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைதளத்தில் மூழ்கி இருக்கும் கிருத்தி ஷெட்டி மீது காதல் கொள்கிறார் பிரதீப் ரங்கநாதன். காதல் காரணமாக தனது அப்பாவிற்கு கூட தெரியாமல் போன் பயன்படுத்தி கிருத்தி ஷெட்டியை காதலிக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் எஸ்.ஜே.சூர்யா கண்டுபிடித்த புதிய சாஃப்ட்வேர் அவர்கள் இருவருக்கும் காதல் இல்லை என்று கூற கிருத்தி ஷெட்டி ப்ரேக்கப் செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து காதல் என்பது மனசு சம்மந்தப்பட்டது, ஆப்களோ, சாஃப்ட்வேர்களோ தீர்மானிக்காது என்றும் நிரூபிக்க பிரதீப் ரங்கநாதன் போராடிகிறார். இறுதியில் அவரது காதலில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… Janhvi Kapoor: பாலிவுட் நடிகை ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Follow Us