AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று பூஜையுடன் தொடங்குகிறது கார்த்தியின் தெலுங்கு படம்

Actor Karthis telugu movie pooja ceremony: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகும் படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்குவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இன்று பூஜையுடன் தொடங்குகிறது கார்த்தியின் தெலுங்கு படம்
கார்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 May 2026 15:38 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகும் படங்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி அவ்வபோது மற்ற் அமொழிகளில் கேமியோ ரோலிலும் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான வா வாத்தியார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நட்டிகர் கார்த்தியின் நடிப்பில் சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படங்களின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த 2026-ம் ஆண்டில் இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

இன்று பூஜையுடன் தொடங்குகிறது கார்த்தியின் தெலுங்கு படம்:

கார்த்தியின் அடுத்த படத்தின் பூஜை விழா இன்று நடைபெறுகிறது. மேட் படத்தை இயக்கிய கல்யாண் சங்கர், இப்படத்தை இயக்குகிறார். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 10 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பு அட்டவணையுடன், நாளை முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்தது சூர்யா 47 படக்குழு – ரிலீஸ் எப்போது

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்

Follow Us