AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அஜித் குமாரின் 64 படம் நடைபெறுமா? வைரலாகும் பதிவு

Ajith Kumar 64 Movie Update Is Viral On Social Media: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக அஜித் குமார் 64 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

அஜித் குமாரின் 64 படம் நடைபெறுமா? வைரலாகும் பதிவு
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 May 2026 20:46 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். சினிமாவில் எந்தவிமான பின்புலனும் இல்லாமல் சொந்த முயற்சியில் நடித்து தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளார். மேலும் சினிமாவிற்காக இவர் கொடுத்த உழைப்பு அவரது ரசிகர்களிடையே ஒரு உத்வேகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையில் கடின உழைப்பு இருந்தால் வெற்றி அடையலாம் என்பதற்கு எடுத்து காட்டாக உள்ளார் அஜித் குமார். இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்தப் படங்களுக்கு பிறகு தற்போது வரை நடிகர் அஜித் குமார் தொடர்ந்து தனது கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வருகின்றார். மேலும் இந்தியா சார்பில் பல கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு பல நாடுகளில் வெற்றியும் பெற்று சாதனை படைத்து வருகிறார். மேலும் தனது அடுத்தப் படமான 64-வது படத்திற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் மீண்டும் கூட்டணி வைக்க உள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் கசிந்து வைரலாகி வருகின்றது.

அஜித் குமாரின் 64-வது படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும்:

இந்த நிலையில் படத்தின் அறிவிப்பு கடந்த 2025-ம் ஆண்டின் இறுதியிலேயே அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு மாதமும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் இறுதியாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்காதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மகேஷ் பாபு முதல் நானி வரை… தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன டோலிவுட் பிரபலங்கள்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆளப்போறான் தமிழன் தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

Follow Us