ஆளப்போறான் தமிழன் தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
Music Director A.R. Rahman extends his wishes to Thalapathy Vijay | 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் தளபதி விஜய் வெற்றிப் பெற்றதை முன்னிட்டு அவருக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டை தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பலப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். அதில் வந்த ஆளப்போறான் தமிழன் பாடல் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல இந்தப் பாடல் தற்போது அவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் இன்று 2026-ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தற்போது வெற்றிப் பெற்றுள்ளார். இதற்கு பான் இந்திய அளவில் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மானும் தனது வாழ்த்துகளை நடிகர் தளபதி விஜய்க்கு தெரிவிதுள்ளது குறிப்பிடத்தக்கது.




தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்:
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும், சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்! என்று ஏ.ஆர்.ரஹ்மான் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… அன் ஆர்டினரி மேன் படத்திலிருந்து வைரலாகும் பிடிஎஸ் வீடியோ!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு,⁰ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள்.⁰பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும்…
— A.R.Rahman (@arrahman) May 4, 2026