AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் விஜய் – கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ

Vijay Family Celebrates the Election Result | தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் விஜய் – கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ
தளபதி விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 May 2026 12:03 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் தளபதி விஜய். இவர் தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் நாயகனாக அறிமுகம் ஆன போது கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் தொடர்ந்து தனது கடின உழைப்பில் காரணமாக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து இதுவரை நடிகர் தளபதி விஜய் நடிப்பில் 63 படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாளான படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் தளபதி விஜய் தற்போது தமிழகத்தில் அரசியலில் குதித்து 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தளபதி விஜய் தொடங்கிய கட்சி சார்பாக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். இதில் விஜய் இரண்டு இடங்களில் போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று மே மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தவெக தலைவர் விஜய்:

அந்த வகையில் இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்படி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகின்றது. இதனை நடிகரும் தவெக தலைவர் விஜய் குடும்பத்தினர் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் விஜயின் தந்தை முன்னதாக கோவில்களுக்கு சென்று வழிபடும் வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஓஜி கூட்டணி இஸ் பேக்… ஜெயராம் – ஊர்வசி நடிப்பில் வைரலாகும் பரிமளா & கோ படத்தின் டைட்டில் டீசர்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை ரத்து செய்த அமேசான்… பேச்சுவார்த்தை நடத்தும் பிரபல நிறுவனம்

Follow Us