Tamil Nadu Election 2026 Results Highlights: சாதனை படைத்த தவெக.. முதல்வராகும் விஜய்!
Tamil Nadu, Kerala, West Bengal, Assam, Puducherry Assembly Election 2026 Results Online: இந்தியாவே தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இன்று பலரின் கேள்விகளுக்கு விடை தெரிந்துவிடும். தமிழ்நாட்டை அடுத்து ஆளப்பொவது யார் என்பதை தீர்மானிக்கும் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. தமிழ்நாடு தேர்தல் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் இங்கே தெரிந்துகொள்ளவும்
Tamil Nadu Election 2026 Results : தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்தது. அரசியல் தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை, பரப்புரை என பம்பரமாய் சுழன்றார்கள். பின்னர் ஏபர்ல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வழக்கத்தைவிட அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இது பல யூகங்களுக்கு வழி வகுத்தது. இந்நிலையில், 2026ன் வாக்கு எண்ணிக்கை மே 4ல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவைத் தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த முடிவுகளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அதுவும் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த முறை விஜய்யின் அரசியல் வருகையால், தமிழக தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அளவு காணப்படுகிறது. மேலும் எக்சிட் போல் வெளியாகி பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இன்று அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்துவிடும். வாக்கு எண்ணிக்கை மே.4 காலை 8.00 மணிக்கு, தபால் வாக்குகள் எண்ணுவதுடன் தொடங்க உள்ளது. இன்று மாலைக்குள் தமிழ்நாட்டை ஆளப்போவது யார் என்பது முடிவாகிவிடும். தமிழ்நாடு தேர்தல் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் இங்கே தெரிந்துகொள்ளவும்
LIVE NEWS & UPDATES
-
சௌமியா அன்புமணி வெற்றி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.
-
பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து
பாமக தலைவர் அன்புமணி தவெகவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், தவெக 100க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
-
தவெகவுக்கு 34.95% வாக்குகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 34.95% வாக்குகளும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 31.38% வாக்குகளும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 27.40% வாக்குகளும் பெற்றுள்ளன.
-
விசிக வேட்பாளர் வெற்றி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விசிக வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றார்.
-
ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து… – விஜய்க்கு பா.ரஞ்சித் வாழ்த்து
இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது. மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் பெற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
-
ஒரு ஓட்டில் தவெக வெற்றி
சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி – தவெக வேட்பாளர் ஸ்ரீநிவாச சேதுபதி ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுகவின் பெரியகருப்பனை தவெக வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
-
டெபாசிட் இழந்த சீமான்..!
காரைக்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் பிரபு, 1,01,358 வாக்குகள் பெற்று 46,074 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் சீமான் டெபாசிட் இழந்தார்
-
இரவு 11 மணி நிலவரம்
தேர்தல் ஆணைய இணையதளத்தின் படி தவெக 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதோடு 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 70 இடங்களில் வெற்றி பெற்றதோடு 4 இடங்களில் முன்னிலை, அதிமுக கூட்டணி 49 இடங்களில் வெற்றி, 4 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
-
வெற்றி, தோல்விகளை பார்த்திருக்கிறோம் – உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெற்றி, தோல்வியை பார்த்திருக்கிறோம். எந்த கஷ்டம் வந்தாலும் மக்களுடன் நிற்போம். புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
-
இது முடிவல்ல – திமுக எம்பி கனிமொழி பதிவு
திமுக எம்பி கனிமொழி தெரிவித்ததாவது, கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து| கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம். புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.
-
அருண் ராஜ் வெற்றி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 திருச்செங்கோடு தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் ராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
-
விஜய்க்கு மமமூட்டி வாழ்த்து
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, தனது எக்ஸ் பக்கத்தில், இந்த மறக்க முடியாத வெற்றியை பெற்றிருக்கும் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த மாநிலத்தை வழிநடத்தி செல்ல உங்களுக்கு பலம் கிடைக்கட்டும் என்றார்.
-
தவெகவின் வெற்றி புரியாத புதிர் – அதிமுகவின் இசக்கி சுப்பையா
அம்பாசமுத்திரம் தொகுதியில் வென்ற அதிமுகவின் இசக்கி சுப்பையா, தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வெற்றி அரசியலில் புரியாத புதிராக உள்ளது. எம்ஜிஆரை விஜயுடன் ஒப்பிட முடியாது அவர் ஒரு சகாப்தம் என்று ஆச்சரியம் தெரிவித்திருந்தார்.
-
விஜய் அண்ணனுக்கு – சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், இந்த தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். -
இது ஜனநாயகம் – தேர்தல் முடிவுகள் குறித்து கனிமொழி கருத்து
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, இது ஜனநாயகம். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
-
தவெக தலைவர் விஜய்க்கு நடிகை சமந்தா வாழ்த்து
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இதை விட பிரம்மாண்டமாக யாராலும் வரலாற்றை திரும்ப எழுத முடியாது. எப்போது நீங்கள் இந்த பாதைய தேர்ந்தெடுத்தீர்கள். இது எப்பொழுதும் உங்கள் கனவா இருந்தது. உங்களை நினைத்து பெருமையாக நினைக்கிறேன் என்றார்.
-
சமூகம் ரசிக மயமாக்கியிருக்கிறது – பிரகாஷ் ராஜ் கருத்து
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், சமூகம் ரசிகர் மயமாக்கியிருக்கிறது, அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. காமராஜர் தோற்றார், மு.க.ஸ்டாலினும் தோற்றிருக்கிறார். அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தொடர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
-
நடிகர் தனுஷ் வாழ்த்து
நடிகர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் விஜய் சார் அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
-
Mari Selvaraj : தேர்தல் முடிவுகள் பெரு வலியை கொடுத்திருக்கிறது – மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் விஜய் சாருக்க்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜின் எக்ஸ் பதிவு
இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் @mkstalin அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள்…
— Mari Selvaraj (@mari_selvaraj) May 4, 2026
-
விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித் குமார்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் வெற்றிக்கு நடிகர் அஜித் குமார் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Rajinikanth : தவெக தலைவர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்தின் எக்ஸ் பதிவு
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
— Rajinikanth (@rajinikanth) May 4, 2026
-
தொய்வின்றி அரசியல் பயணம் தொடரும் – மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே லட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான் என தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக்… pic.twitter.com/CCsVdwJX0A
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 4, 2026
-
ஃபினிக்ஸ் பறவைபோல – எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் ஃபினிக்ஸ் பறவைபோல் அதிமுக மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும். ஜெயலலிதாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் என்றென்றும் மக்கள் பணியை அதிமுக தொடரும் மக்கள்தான் ஆட்சி. மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
தான் படித்த கல்லூரியிலேயே வெற்றிச் சான்றிதழை பெற்ற விஜய்
பெரம்பூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள விஜய் தான் படித்த லயோலா கல்லூரியிலேயே வெற்றிச் சான்றிதழை பெற்றார். பின்னர் அதனை ரசிகர்களை நோக்கி காட்டினார்.
-
VK Sasikala :வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி – விகே சசிகலா பாராட்டு
அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் வி.கே.சசிகலா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், தமிழக வரலாற்றில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் திமுக மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.
-
புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள் – உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள் என்று தெரிவத்துள்ளார்.
-
Kamal Haasan Wishes Vijay : விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
-
TVK Vijay : விஜய்க்கு குஷ்பு வாழ்த்து
TVK Vijay : தவெக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற விஜய்க்கும் அவரது கட்சியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உங்களை தலைவராக பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். உண்மையான ஜனநாயகன் என்று தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் பதிவு
Heartiest congratulations to my brother @actorvijay and his entire team of @TVKVijayHQ on the spectacular win in Tamilnadu. God bless you today, and always. Now look forward to seeing you lead, truly as the #JanaNayagan 🎉🎉🎉🎉🎉👍👍👍👍❤️❤️❤️❤️#Vijay #TVKVijay #VijayCM pic.twitter.com/PKyWOFNWug
— KhushbuSundar (@khushsundar) May 4, 2026
-
பெற்றோர் வீட்டு மாடியில் நின்று தொண்டர்களுக்கு கைகாட்டிய விஜய்
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்று அவர்களிடம் விஜய் ஆசி பெற்றார். அப்போது மாடியில் இருந்து தொண்டர்களுக்கு கைகாட்டினார்.
தொண்டர்களுக்கு கைகாட்டிய விஜய்
#WATCH | Tamil Nadu | TVK chief Vijay acknowleges the crowd present outside his parents house in Chennai. His party has secured maximum lead in Tamil Nadu elections. pic.twitter.com/3gkkRNyYfS
— ANI (@ANI) May 4, 2026
-
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் – டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், 2026 பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பை அமமுக ஏற்றுக்கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
-
பெற்றோரிடம் ஆசி பெற்ற தவெக தலைவர் விஜய்
தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்றார்.
-
மீண்டும் போராடுவார்… மீண்டும் வெல்வார் – கமல்ஹாசன் பதிவு
மநீம தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில், ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார் என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு ராகுல் தொலைபேசியில் வாழ்த்து
தவெக தலைவர் விஜய்யிடம் தொலைபேசியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
-
தவெகவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றிகள். மக்களின் பிரச்னைகளைக் களைவதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். சிறப்பான தேர்தல் செயல்பாட்டை வெளிப்படுத்திய தவெகவிற்கு எங்களது வாழ்த்துகள். தமிழகத்தின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொள்ளும். என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவு
Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives.
Congratulations to TVK on their impressive performance.
The Centre will leave no…
— Narendra Modi (@narendramodi) May 4, 2026
-
திமுக கூட்டணி பின்னடைவு – நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஆலோசனை
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
-
நண்பர் விஜய் – சூர்யா வாழ்த்து
நடிகர் சூர்யா தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
-
‘தமிழக முதல்வர் விஜய்’ – தவெக அலுவலகம் முன்பு பேனர் கட்டிய தொண்டர்கள்
தமிழக முதல்வர் விஜய் என தமிழக வெற்றிக் கழக அலுவலகம் முன்பு அக்கட்சியின் தொண்டர்கள் பேனர் கட்டியுள்ளனர்.
வைரலாகும் வீடியோ
#WATCH | TVK Supporters put up a poster outside the TVK Office in Chennai featuring TVK chief as the Tamil Nadu Chief Minister.
TVK has won 22 seats and is leading on 87 seats as per the Election Commission trends, set to create history in Tamil Nadu. pic.twitter.com/L1hAj9LhLk
— ANI (@ANI) May 4, 2026
-
விஜய்க்கு மகேஷ் பாபு வாழ்த்து
பிரபல தெலுங்கு மகேஷ் பாபு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், புதிய அளவுகோல்களை அமைத்து, ஒரு பிரம்மாண்டமான வெற்றியை ஈட்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையை இன்றைய தினம் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றியானது தமிழ்நாட்டிற்குப் பயனுள்ள முன்னேற்றமாக நிச்சயம் உருவெடுக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
-
41 பேருடைய கர்மா – தவெக வேட்பாளர் முஸ்தபா கருத்து
மதுரை மத்தி தொகுதியில் வென்ற த.வெ.க வேட்பாளர் முஸ்தபா செய்தியாளர்களிடம் பேசியதாவது, 41 பேருடைய கர்மா வேலை செய்திருக்கிறது. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடைய சாபத்தால்தான் இன்று திமுக அதளப்பாதாளத்தில் இருக்கிறது.
இன்னும் 20 வருடங்களுக்கு திமுக வனவாசம் செல்லப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
– -
தி.நகரில் வெற்றி – வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட என்.ஆனந்த்
தியாகராய நகர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக துணைப் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்டார்
-
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் பெரியம்மா வெற்றி
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் பெரியம்மா தமிழ்செல்வி வெற்றி பெற்றிருக்கிறார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட இவர், 71,234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
-
95,769 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 95,769 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
-
வெற்றியை கரூர் சம்பவத்திற்கு அர்ப்பணிக்கிறோம் – ஆதவ் அர்ஜுனா
தமிழகத் தேர்தல்களில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “இந்த வெற்றியை நாங்கள் ‘கரூர் சம்பவத்திற்கே’ அர்ப்பணிக்கிறோம். ஓட்டுக்குப் பணம் என்ற நடைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். திமுக மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
-
Tamil Nadu Election Result : கிங் மேக்கரான தொகுதிகளின் நிலவரம்
தமிழக தேர்தலில் கிங் மேக்கரான தொகுதிகளின் நிலவரம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்
இங்கே
-
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்குமார்
திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட தவெக நிர்வாகி அருண் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
-
சேகர் பாபு வெற்றி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளின்படி, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் அமைச்சருமான பி.கே.சேகர் பாபு வெற்றி பெற்றுள்ளார்.
-
மன்னராட்சிக்கு முடிவு எழுதப்பட்ட நாள் இன்று – ஆதவ் அர்ஜுனா
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவில் 50 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் புரட்சி ஏற்பட்டுள்ளது. இளைஞர்களும் பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வெற்றி
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் 100582 வாக்குகள் பெற்று 44583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து
அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் , தமிழ்நாடு அரசியலில் பிரமாண்டமான அறிமுகத்தைப் பெற்றிருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
-
தவெகவுடன் காங்கிரஸ்?
ஆட்சியில் சேர விஜய் அழைத்தால் காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த கிரிஷ் சோடங்கர் பெண்கள், இளைஞர்களின் ஆதரவு கிடைத்ததால் தவெக அதிகளவில் வெற்றி; தமிழகத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து முடிவெக்கப்படும் என்றார்.
-
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினை 9,122 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்
-
தவெக 1.28 கோடி வாக்குகள்
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிகபட்சமாக தவெக 1.28 கோடி வாக்குகள் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 1.17 கோடி வாக்குகளும் அதிமுக கூட்டணி 1.08 கோடி வாக்குகளும் பெற்றுள்ளன.
-
செந்தில்பாலாஜி வெற்றி
கோவை தெற்கு பகுதியில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி வெற்றி
-
Ooty Election Result : பாஜக வேட்பாளர் போஜராஜன் வெற்றி
உதகை தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
-
TNagar Election Result : புஸ்ஸி ஆனந்த் வெற்றி
திநகர் தொகுதியில் தவெகவின் புஸ்ஸி ஆனந்த் வெற்றி பெற்றார்
-
MK Stalin : மு.க.ஸ்டாலின் தோல்வி
சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் , 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
-
Thiruvarur Election Result : பூண்டி கலைவாணன் வெற்றி
திருவாரூர் தொகுதியில் திமுகவின் பூண்டி கலைவாணன் 17777 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
-
விஜயபாஸ்கர் 59000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 59000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
-
Mylapore : மயிலாப்பூர் தொகுதியில் தவெக வெற்றி
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தவெகவின் வெங்கட்ரமணன் 54581 வாக்குகள் பெற்று வெற்றி
-
Kolathur Election Result : கொளத்தூரில் தோல்வியை நெருங்கும் விஎஸ் பாபு
கொளத்தூர் தொகுதியில் கிட்டத்தட்ட தோல்வியை தழுவினார் முக ஸ்டாலின். வெற்றி முகத்தில் இருக்கிறார் தவெக வேட்பாளர் பாபு
-
TVK : 1 கோடி வாக்குகளை கடந்த தவெக
இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் 1 கோடி வாக்குகளை கடந்த தமிழக வெற்றிக்கழகம்
வாக்கு சதவீதம்
-
Anna nagar Election Result : ராம்குமார் வெற்றி
சென்னை அண்ணா நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் ராம்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
-
மதுரை தெற்கில் தவெக வெற்றி
மதுரை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் கோபிசன் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவக்கின்றன.
-
Gobichettipalayam Election Result : செங்கோட்டையன் வெற்றி
கோபிச்செட்டிப்பாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி
-
Trichy Election Result : கேஎன் நேரு வெற்றி
திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுகவின் கேஎன் நேரு சுமார் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
-
தாம்பரம் தவெக வேட்பாளர் வெற்றி
தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரத்குமார் சுமார் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
-
மாற்றத்தை கொடுப்பார் விஜய் – S.A.சந்திரசேகர்
விஜய் நிச்சயம் மக்களுக்காக பெரிய மாற்றத்தை கொண்டுவருவார் என SA.சந்திரசேகர் கருத்து
-
Tambaram Election Result : தாம்பரம் – தவெக வெற்றி
தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரத்குமார் வெற்றி பெற்றார். 16000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி
-
திணறும் திமுக
திமுக கூட்டணி 60 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் 10 இடங்களில் 1000க்கும் குறைவான வாக்குகளின் முன்னிலையில் உள்ளன.
-
முக ஸ்டாலின் 14வது சுற்று முடிவிலும் பின்னடைவு
கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் 14வது சுற்று முடிவிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார். தவெக வேட்பாளர் பாபு 7000 வாக்குகள் வித்தியாசத்தின் முன்னிலையில் இருக்கிறார்
-
வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்கிறார் தவெக தலைவர் விஜய்
வெற்றி சான்றிதழ் பெற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்கிறார் தவெக தலைவர் விஜய்
-
Thoothukudi Election Result 2026 : ஸ்ரீநாத் வெற்றி
தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். இவர் எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்தார்
-
தஞ்சை : தவெக வேட்பாளர் வெற்றி
தஞ்சாவூர் தொகுதி தவெக வேட்பாளர் 18252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
-
ஸ்டாலினுக்கு தொடர்ந்து பின்னடைவு
கொளத்தூர் தொகுதியில் 13 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் முக ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார். தவெக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்
-
விஜய்யின் வீட்டுக்கு திரிஷா வருகை
தவெக தலைவர் விஜய்யின் வீட்டுக்கு திரிஷா வருகை தந்துள்ளார்
வீடியோ
#WATCH | Tamil Nadu: Actor Trisha Krishnan arrives at the residence of TVK chief Vijay, in Chennai.
TVK is currently leading in 106 seats of the total 234 in the state. pic.twitter.com/Sezg1xgYDQ
— ANI (@ANI) May 4, 2026
-
vijay Meeting : விஜய் ஆலோசனை
சென்னையில் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்
-
காங்கிரஸ் 6 தொகுதிகளின் முன்னிலை பெற்று வருகிறது
திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது
-
Vijay Election Result : விஜய் தொடர்ந்து முன்னிலை
திருச்சி மற்றும் பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்
-
தவெக அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது
-
அலங்காரப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது
தேர்தல் முடிவுகளில் திமுக தொடர் பின்னடைவைச் சந்தித்து வருவதால், வெற்றிக் கொண்டாட்டத்திற்காக அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் அலங்காரப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு அகற்றப்பட்டன.
-
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியது
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் நிலவரப்படி தவெக 10% வாக்குகளை அதிகம் வாங்கியுள்ளது. இரண்டாம் இடத்தில் அதிமுக உள்ளது. திமுக 3 வது இடத்தில் உள்ளது
-
முக ஸ்டாலினை பின்னுக்கு தள்ளும் விஎஸ்பாபு
கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து முக ஸ்டாலின் பின்னடைவில் இருக்கிறார். தவெக தலைவர் விஎஸ்பாபு 33609 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்
-
3 தவெக முன்னிலை
புதுக்கோட்டை 6 தொகுதிகளில் 3 தவெக முன்னிலை வகித்து வருகிறது
-
TVK Election Result : தவெக தொடர்ந்து முன்னிலை
11.30 நிலவரப்படி தவெக 100 சீட்டுகளை தாண்டி முன்னிலையில் உள்ளது
மேப் விவரம்
-
Vijay : விஜய் வீட்டில் கொண்டாட்டம்
விஜய் வீட்டில் கொண்டாட்டம்
JUST IN 🔔 : விஜய் அண்னன் வீட்டில் கொண்டாட்டம் தொடங்கியது ! 😍🔥@TVKPartyHQ | #WhistlePodu pic.twitter.com/T07mR5ZXsJ
— Prakash Vijay (@PrakazVijay_Of) May 4, 2026
-
தவெக – அதிமுக கூட்டணி வருமா?
தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும் என தெரிகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக வெற்றி கழகம் நேர் எதிராக எதிர்த்து வருவதால், அந்தக் கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
-
Hung Assembly In Tamil Nadu : தொங்கு சட்டப்பேரவை ஏற்பட வாய்ப்பு?
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் 105 தொகுதிகளிலும், அதிமுக 78 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வரும் நிலையில், தொங்கு சட்டப்பேரவை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
Rangaswamy Election Result : ரங்கசாமி முன்னிலை
புதுச்சேரி அரசியலில் ரங்கசாமி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்
Puducherry Chief Minister N Rangaswamy is leading from the Thattanchavady assembly seat by a margin of more than 4336 votes, according to the Election Commission of India trends
(File pic) pic.twitter.com/eQs69X8zaU
— ANI (@ANI) May 4, 2026
-
திருவெறும்பூர் தொகுதி திமுக பின்னடைவு
திருவெறும்பூர் தொகுதியில் முன்னணியில் இருந்து வந்த அன்பில்மகேஷ் தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறார்
-
டிஆர்பி ராஜா பின்னடைவு
மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தவ டிஆர்பி ராஜா, தற்போது பின்னடைவை சந்திக்க தொடங்கி வருகிறார்
-
ரசிகர்கள் வருகை இருக்கலாம் – போலீசார் பாதுகாப்பு
ரசிகர்கள் வருகை இருக்கலாம் என்பதாலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
vijay : நடிகர் விஜய் வீட்டில் பலத்த பாதுகாப்பு
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஓபிஎஸ் தொடர்ந்து முன்னிலை
போடிநாயகன்னூர் தொகுதியில் திமுகவின் வேட்பாளர் ஓபிஎஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது
-
உதயநிதி ஸ்டாலின் 30 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை
4வது சுற்று முடிவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 30 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார்
-
தொடர்ந்து பின் தங்கும் முதல்வர் ஸ்டாலின்
திமுக அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின்கூட தொடர்ந்து பின் தங்கி வருகிறார்
-
விஜய் தனித்து ஆட்சி அமைப்பார் – தலைவர்கள் நம்பிக்கை
விஜய் தனித்து ஆட்சி அமைப்பார் என தவெக இரண்டாம் நிலை தலைவர்கள் நம்பிக்கை
-
21 அமைச்சர்கள் பின்னடைவு
முதலமைச்சர் முகஸ்டாலின் உட்பட 21 அமைச்சர்கள் பின்னடைவில் உள்ளனர்
-
TVK Election Result 2026 : 98 தொகுதிகளில் தவெக முன்னணி
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் 98 தொகுதிகளில் தவெக முன்னணியில் இருக்கிறது.
-
விஜய் தொடர்ந்து முன்னிலை
விஜய் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறார். ஆக மொத்தமாக தவெக 98 சீட்டுகள் முன்னிலை பெற்று வருகிறது
Published On - May 04,2026 6:01 AM