ராம் சரணின் பெத்தி படத்தின் ரிலீஸ் எப்போது? இன்று மாலை வெளியாகும் அதிகாரப்பூர்வ அப்டேட்
Actor Ram Charans Peddi Movie Release Update: நடிகர் ராம் சரண் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பெத்தி. இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ராம் சரண். இவர் தெலுங்கு சினிமா ரசிகர்களால் மட்டும் இன்றி பான் இந்திய சினிமா ரசிகர்களிடையே மெகா ஸ்டார் என்று கொண்டாடப்படும் சிரஞ்சீவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆன நடிகர் ராம் சரண் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றார். நடிகர் ராம் சரணின் நடிப்பில் முன்னதாக வெளியான மகதீரா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் பான் இந்திய அளவில் பிரபலமாக உள்ள நடிகர் ராம் சரண் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பெத்தி.




இன்று மாலை வெளியாகிறது பெத்தி படத்தின் ரிலீஸ் அப்டேட்:
இயக்குநர் புஜ்ஜிபாபு சணா எழுதி இயக்கி உள்ள படம் பெத்தி. இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி முன்னதாக இரண்டு முறை அறிவிக்கப்பட்டு பிறகு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தி அறிவிக்க உள்ளது படக்குழு. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Chiyaan Vikram: பிரச்சனைகள் ஓவர்.. விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#GetReadyForPeddi
Exciting updates starting from today ❤️🔥#Peddi release date announcement press meet today from 4 PM onwards▶️ https://t.co/OF53uhkAVC pic.twitter.com/QZVIjbUXdn
— PEDDI (@PeddiMovieOffl) May 1, 2026
Also Read… கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் படம் மூன்றாம் பிறை மறுசீரமைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது