AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகேஷ் பாபு முதல் நானி வரை… தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன டோலிவுட் பிரபலங்கள்

Telugu cinema celebrities have extended their wishes to Thalapathy Vijay: தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் தளபதி விஜய் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். இதற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி தெலுங்கு சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மகேஷ் பாபு முதல் நானி வரை… தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன டோலிவுட் பிரபலங்கள்
விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 May 2026 20:04 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து தற்போது 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையான வெற்றியைப் பெற்றுள்ளார் தளபதி விஜய். இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தமிழகத்தில் வெற்றிப் பெற்று போட்டியிட்ட வாக்காளர்களில் பலர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்று வருகின்றனர். சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் தளபதி விஜய் தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றியுள்ளார். இதனை தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்கள் பலர் தளபதி விஜய்க்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதில் யார் யார் தங்களது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர் என்பதைப் பார்க்கலாம்.

தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன டோலிவுட் பிரபலங்கள்:

புதிய அளவுகோல்களை அமைத்து, பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டிய நடிகர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையை இன்றைய நாள் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றி, தமிழ்நாட்டிற்குப் பொருள் பொதிந்த முன்னேற்றமாக அமையும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன டோலிவுட் பிரபலங்கள்:

முதலில் சந்தேகிக்கப்பட்டு, பின்னர் முடிசூட்டப்பட்டார். எங்கள் வீட்டில் இது நடந்தது, இப்போது எங்கள் பக்கத்து வீட்டிலும் நடக்கிறது. பலவீனமானவர் வெல்வது எப்போதுமே ஒரு முழுமையான சினிமா (அல்லது முழுமையான அரசியல் என்று சொல்லலாமா?). தமிழக மக்களுக்கு இனிமேலும் நல்லவை நடக்கும் என நம்புகிறேன் என்று நடிகர் நானி தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன டோலிவுட் பிரபலங்கள்:

நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, வாக்களிக்கப் பெருந்திரளாகத் திரண்டு வந்து, தங்களுக்காகத் தாங்களே உறுதியாக நிலைப்பாடு எடுத்த தமிழக மக்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக. தமிழக மக்கள் அனைவருக்கும், அத்துடன் புதிய முதலமைச்சருக்கும் சகல வளங்களும் கூட்டு வளர்ச்சியும் பெருக வாழ்த்துகிறேன். இந்தப் புதிய காலகட்டத்தையும், புதிய முகத்தையும் காண்பதில் மிகுந்த உற்சாகம் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன டோலிவுட் பிரபலங்கள்:

நடிகர் ராம் சரண் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, தமிழகத் தேர்தலில் ஈட்டிய சிறப்பான வெற்றிக்கு, நடிகர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தொலைநோக்குப் பார்வையும், மக்களுடனான உங்கள் பிணைப்பும் உண்மையிலேயே மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளன. தமிழகத்தைத் தொடர் முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்வதில் உங்களுக்குப் பெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம்.

Also Read… தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதற்கு நிஜமான காரணம் இதுதான் – சுந்தர் சி ஓபன் டாக்

தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன டோலிவுட் பிரபலங்கள்:

வாரிசு படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, விஜய் சார், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் மீது மிகுந்த மகிழ்ச்சியும், இந்தப் புதிய காலகட்டத்தில் உங்களைக் காண்பதில் பெரும் உற்சாகமும் கொள்கிறேன். உங்களுக்கு என் நல்வாழ்த்துகள், சார் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… இந்த வாரத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் டாப் 1 இடத்தை பிடித்த சீரியல் எது தெரியுமா?

தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன டோலிவுட் பிரபலங்கள்:

அன்புள்ள விஜய் உங்கள் முதல் தேர்தலில் நீங்கள் ஈட்டியுள்ள, மிகச் சிறப்பானதும் முற்றிலும் தகுதியானதுமான இந்த வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அசைக்க முடியாத ஆர்வத்துடனும் உறுதியான நோக்கத்துடனும் தொடர்ந்து ஊக்கமளித்து, வழிநடத்தி, சேவையாற்றிட வாழ்த்துகிறேன். தமிழ்நாடு மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் நீங்கள் ஆற்றவிருக்கும் பொதுப்பணிக்கு என் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us