AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளி வெளியகும் பிரித்விராஜின் கலிஃபா படம் – அப்டேட் இதோ

Prithviraj Sukumarans Khalifa Movie Release Update: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமார. இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கலிஃபா. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஒணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளி வெளியகும் பிரித்விராஜின் கலிஃபா படம் – அப்டேட் இதோ
கலிஃபாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 May 2026 19:36 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி படங்களை இயக்கியும் வருகிறார். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பது போலவே இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கமிர்ஷியல் மற்றும் சீரியசான கதை என அனைத்திலும் எந்த படத்தை எடுத்தாலும் வெற்றியை மட்டுமே தன்வசம் வைத்துள்ளார் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் ஆடு ஜீவிதம் படத்திற்காக உடல் எடையை கடுமையாக குறைத்து வித்யாசமான தோற்றத்தில் இருந்தார். இது மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சீர்யசான கதை மற்றும் கமெர்ஷியல் என மாறிமாறி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கலிஃபா. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரித்விராஜின் கலிஃபா படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கலிஃபா படத்தின் வெளியீடு குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார். மேலும் கலிஃபா படம் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பிரித்விராஜின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்டுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… வானில் ஒரு திடீர் மாற்றம்… வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களைப் போலவே – வெளியானது சட்டென்று மாறுது வானிலை பட ட்ரெய்லர்!

பிரித்விராஜ் சுகுமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Nooru Saami: விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ‘அம்மா அம்மாதான்’ பாடல் வெளியீடு!

Follow Us