AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆச்சாலே மச்ச மக்கமாலே.. ஒரு வருடத்தை கடந்தது சசிகுமார் – சிம்ரனின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம்!

One Year Of Tourist Family: தமிழில் இயக்குநராக அபிஷன் ஜீவிந்த் நுழைந்த திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி. இதில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்க, கடந்த 2025ம் ஆண்டு மே 1ம் தேதியில் வெளியாகியிருந்தது. இன்று (01/05/2026) இப்படம் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்த பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆச்சாலே மச்ச மக்கமாலே.. ஒரு வருடத்தை கடந்தது சசிகுமார் – சிம்ரனின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம்!
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 May 2026 16:51 PM IST

தமிழில் கடந்த 2025ம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி, மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இதை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) இயக்கக, நடிகர்கள் சசிகுமார் (Sasikumar) மற்றும் சிம்ரன் (Simran) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது இலங்கையில் இருந்து அகதிகளாக தப்பித்துவந்த குடும்பம், சென்னையில் எவ்வாறு தங்களின் வாழ்க்கையை தொடங்குகின்றனர் என்பதை மையமாக கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த படத்தில் சசிகுமார், சிம்ரனுடன் நடிகர்கள் லோகாலட்சுமி, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது கடந்த 2025ம் ஆண்டில் சூர்யாவின் (Suriya) ரெட்ரோ (Retro) மற்றும் நானியின் (Nani) ஹிட் 3 (HIT 3) போன்ற பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுடன் இணைந்து வெளியாகியிருந்தது.

ஆனாலும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புகள் இருந்தது. அந்த வகையில் இன்று 2026 மே 1ம் தேதியுடன், இந்த சூப்பர் ஹிட் படமானது வெளியாகி 1 ஆண்டை கடந்துள்ளது. இதுகுறித்த ஸ்பெஷல் பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரியோ ராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் டைட்டில் இதுவா? – அறிவிப்பு வீடியோ இதோ!

டூரிஸ்ட் பேமிலி படக்குழு வெளியிட்ட ஒரு வருட நிறைவு குறித்த எக்ஸ் பதிவு:

இந்த டூரிஸ்ட் பேமிலி திரிபடமானது வெறும் ரூ 7 கோடிகளில் தயாராகி, உலகலாவிய வசூலில் ரூ 90 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. அந்த வகையில் தமிழில் கடந்த 2025ம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி, அதிகம் வரவேற்பை பெற்ற படங்களில் இது முதலிடத்தை பிடித்திருந்தது. அந்த வகையில் இப்படத்தை இயக்கி வெற்றியை கொடுத்ததுடன், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் இவரின் நடிப்பில் கடந்த 2026 பிப்ரவரியில் வெளியான படம்தான் வித் லவ் இப்படமானது இவருக்கு நடிகராக சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது.

இதையும் படிங்க: பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட பில்லாவும் ரங்காவும் – வைரலாகும் போட்டோ

அந்த வகையில் தற்போது மேலும் நடிகராக புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில், இவரின் இயக்கத்தில் அடுத்த படமானது வரும் 2027ம் ஆண்டில் உருவாகும் என அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவரின் இயக்கத்தில் வெளியான முதல் படமான டூரிஸ்ட் பேமிலி தற்போதுவரையிலும் ஓடிடியில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us