Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tourist Family : தொட்டதெல்லாம் தூள்பறக்குது மம்பட்டியான்.. குஷியில் நடனமாடிய ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழு..!

Tourist Family Film Crew Dances : நடிகர் சசிகுமாரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியானது. இந்த படமானது திரையரங்குகளில் தற்போதுவரை நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், ஷூட்டிங்கின்போது நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tourist Family : தொட்டதெல்லாம் தூள்பறக்குது மம்பட்டியான்.. குஷியில் நடனமாடிய ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழு..!
டூரிஸ்ட் பேமிலி படக்குழுImage Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 25 May 2025 23:57 PM

சினிமாவில் தனது முதல் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth). இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) . இந்த படத்தில் நடிகர் சசிகுமார் (Sasikumar) மற்றும் சிம்ரன் (Simran) முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகர் சசிகுமார் நடித்திருந்த இந்த டூரிஸ்ட் பேமிலி படத்தை , மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த டூரிஸ்ட் பேமிலி படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துடன் சூர்யாவின் ரெட்ரோ (Retro) மற்றும் தெலுங்கு நடிகர் நானியின் ஹிட் 3 (Hit 3) போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.

குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அந்த அளவிற்கு வரவேற்புகள் கிடைக்காது என்று எதிர்பார்த்த நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியான போதிலும், இந்த டூரிஸ்ட் பேமிலி படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 3 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது , மம்பட்டியான் பாடலுக்குப் படக்குழு நடனமாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மம்பட்டியான் பாடலுக்கு நடனமாடிய டூரிஸ்ட் பேமிலி படக்குழு :

நடிகர் சசிகுமார் இந்த படத்தில் மிகவும் எமோஷனல் மற்றும் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் நடிகை சிம்ரனும் இந்த படத்தில் அருமையாக நடித்திருந்தார் என்றே கூறலாம். மேலும் இவர்களுடன் நடிகர் யோகிபாபு, நிதுஷன் தர்மதாஸ், கமலேஷ் ஜெகன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இந்த படமானது பேமிலி என்டெர்டைமண்ட் படமாக அமைந்திருந்தது. இந்த படமானது வெளியாகி 3 வாரங்களை கடந்த நிலையில், இதுவரை சுமார் ரூ. 75 கோடிகளைத் தாண்டி வசூல் செய்துள்ளது. சுமார் ரூ. 8 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படம், 75 கோடிகளைப் பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

டூரிஸ்ட் பேமிலி படத்தின் கதைக்களம் :

சசிகுமார் மற்றும் சிம்ரனின் இந்த படமானது இலங்கைத் தமிழர் குடும்பத்தை வைத்து நடக்கும் சம்பவங்களைப் பற்றி உள்ளது. இலங்கையில் வாழமுடியாமல் கப்பல் மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்த சசிகுமார் மற்றும் சிம்ரனின் குடும்பம், போலீசில் மாட்டிக்கொள்ளாமல், தமிழகத்தில் சாதாரண தமிழர்கள் போலவே வாழ்கிறார்கள் இதற்கிடையே இவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் மற்றும் தமிழகத்தில் வாழ அவர்கள் செய்யும் போராட்டங்கள் என இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த படமானது எமோஷன், நகைச்சுவை, பீல் குட் மற்றும் எதிர்பார்ப்பு என அனைத்து கதைக்களத்துடனும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

benefits of walking : சாப்பிட்டவுடன் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?
benefits of walking : சாப்பிட்டவுடன் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?...
சிறுநீரகங்கள் செயலிழப்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
சிறுநீரகங்கள் செயலிழப்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?...
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பிரச்னையா இருக
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பிரச்னையா இருக...
அதிகமாக டீ குடிப்பீங்களா? அப்போ இந்த பிரச்னை ஏற்படலாம்!
அதிகமாக டீ குடிப்பீங்களா? அப்போ இந்த பிரச்னை ஏற்படலாம்!...
டையபடிக் ஷாக் பற்றி தெரியுமா? அதன் அறிகுறிகள் என்ன ?
டையபடிக் ஷாக் பற்றி தெரியுமா? அதன் அறிகுறிகள் என்ன ?...
அரக்கோணம்: துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக மன்ற உறுப்பினர் கைது.!
அரக்கோணம்: துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக மன்ற உறுப்பினர் கைது.!...
சிம்புவின் டைட்டில் கார்டு வீடியோவை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!
சிம்புவின் டைட்டில் கார்டு வீடியோவை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!...
ரிஷபம் ராசியில் புதன்... தொட்டதெல்லாம் வெற்றி பெறும் 6 ராசிகள்!
ரிஷபம் ராசியில் புதன்... தொட்டதெல்லாம் வெற்றி பெறும் 6 ராசிகள்!...
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?...
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கலாமா?
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கலாமா?...
திரும்ப வருவேனா? வரமாட்டேனா..? ஓய்வு குறித்து தோனி ஜாலி பதில்!
திரும்ப வருவேனா? வரமாட்டேனா..? ஓய்வு குறித்து தோனி ஜாலி பதில்!...