Thug Life : சிம்புவின் டைட்டில் கார்டு வீடியோவை வெளியிட்ட ‘தக் லைஃப்’ படக்குழு.. ரசிகர்கள் மத்தியில் வைரல்!
Silambarasans Title Card Video : பத்து தல படத்தைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடித்துவந்த படம் தக் லைஃப். கமல்ஹாசன் எழுத்து, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய நாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இப்படக்குழு சிம்புவின் டைட்டில் கார்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநராக இருந்து வருபவர் மணிரத்னம் (Mani Ratnam). இவரின் இயக்கத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தின் கதையை நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) மற்றும் மணிரத்னம் இணைந்து எழுதியுள்ளனர். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் KH234 என்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவந்தது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனும் (Silambarasan) முக்கிய நடிகராக நடித்துள்ளார். மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் கமல் ஹாசன் கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதைப்போல இந்த சிம்புவின் ரோலுக்கு முக்கியத்துவம் உள்ளது. நடிகர் சிலம்பரின் இந்த படத்தில் அதிரடி நாயகனாக நடித்துள்ளார். பத்து தல படத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் உழைத்துள்ளார்.
இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் மற்றும் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்த தக் லைஃப் படக்குழு , நடிகர் சிலம்பரசனின் டைட்டில் கார்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த வீடியோவானது , சிலம்பரசனின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சிலம்பரசனின் டைட்டில் கார்ட் வீடியோ :
Not just Good or Bad, he’s the BEST#ThuglifeAudioLaunch#ThugLife #ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A… pic.twitter.com/7pH9iLshNv— Turmeric Media (@turmericmediaTM) May 25, 2025
நடிகர் சிலம்பரசன் மற்றும் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த தக் லைஃப் படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அந்த அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக இந்த தக் லைஃப் படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் அடுத்தடுத்த 3 படங்கள் உருவாக்கவுள்ளது.
சிலம்பரசனின் புதிய படங்கள் :
தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் மட்டம் 3 படங்கள் உருவாக்கவுள்ளது. பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாஸ்கரன் இயக்கத்தில் STR 49 படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50 மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 போன்ற படங்களில் நடிக்கவுள்ளார். இந்த படங்கள் வரிசையாக அடுத்தடுத்த வருடங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.