MS Dhoni on Retirement: திரும்ப வருவேனா? வரமாட்டேனா..? 5 மாதங்கள் டைம் இருக்கு.. ஓய்வு குறித்து தோனி ஜாலி பதில்!
CSK's IPL 2025 Finale Win: ஐபிஎல் 2025 சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்றமாக அமைந்தாலும், கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. போட்டிக்குப் பின், எம்.எஸ். தோனி தனது ஓய்வு குறித்தும், அணியின் செயல்திறன் குறித்தும் பேசினார். அவர் ஓய்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த சீசனில் கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். தோனியின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கும், அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும், ஐபிஎல் 2025 சீசனின் கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கலக்கல் வெற்றி பெற்றது. அதாவது, 2025 மே 25ம் தேதியான இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு பேசிய எம்.எஸ்.தோனி (MS Dhoni) ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திறன் குறித்தும், தனது ஓய்வு குறித்தும் ஜாலியாக பேசினார். தற்போது, இது இனையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
என்ன சொன்னார் எம்.எஸ்.தோனி..?
போட்டிக்கு பிறகு எம்.எஸ்.தோனியிடம் ஓய்வு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திறன் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த வெற்றியை பற்றி பேசிய எம்.எஸ்.தோனி, “இது நல்லது! இன்றைய ஆட்டம் ஹவுஸ் ஃபுல்லா இருந்தது என்று நான் சொல்ல மாட்டேன். எங்களுக்கு ஒரு நல்ல சீசன் இல்லை. ஆனால், இன்றைய செயல்திறன் அந்த சிறந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். சீசனில் நாங்கள் கேட்ச்சிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால், இன்று நாங்கள் சிறப்பாக பீல்டிங் செய்தோம். ” என்று தெரிவித்தார்.
ஓய்வு குறித்து பேசிய தோனி:
MS Dhoni full post match interview & Most awaited interview Ever in cricket history. Almost 15 crores peoples are waiting for this.#MSDhoni𓃵 #MSDhonipic.twitter.com/cDvywO4DHr
— Nick (@IamRealNick1) May 25, 2025
ஐபிஎல்லில் தனது எதிர்காலம் குறித்து பேசிய எம்.எஸ்.தோனி, “அவசரமாக எந்த முடிவையும் எடுக்க போவதில்லை. எனக்கு ஒரு முடிவை எடுக்க 4 முதல் 5 மாதங்கள் உள்ளன. அவசரம் இல்லை. உடலை கட்டுப்போப்பாக வைத்திருப்பது முக்கியம். நீங்கள் உங்கள் சிறந்ததை கொடுக்க வேண்டும். வீரர்கள் தங்கள் செயல்திறனை அடிப்படையாக கொண்டு ஓய்வு பெற தொடங்கினால், பலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றுவிடுவார்கள்.
நான் ராஞ்சிக்கு திரும்பி சென்று சில பைக் சவாரிகளை அனுபவிப்பேன். ஓய்வு குறித்து நான் முடித்துவிட்ட்டேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் சொல்லவில்லை. எனக்கு யோசிக்க நேரம் இருக்கும், நான் ஒரு முடிவு எடுத்து உங்கள் தெரியப்படுத்துகிறேன்.” என்று தெரிவித்தார்.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் குறித்து தோனி கூறுகையில், “அடுத்த ஐபிஎல் 2025 சீசனில் ருதுராஜ் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நான் கடைசி சீட்டில் அமர்ந்திருந்தேன். ஆண்ட்ரே சித்தார்த் என் அருகில் அமர்ந்திருக்கிறார். அவர் என்னை விட 25 வயது இளையவர், இது என்னை வயதானவராக உணர வைக்கிறது.” என்று தெரிவித்தார்.