World Legends Championship 2025: WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
India vs Pakistan Clash: இந்திய சாம்பியன்ஸ் அணி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளது. இதற்கு முன்னர் லீக் சுற்றுப் போட்டிகளையும் புறக்கணித்தது. EaseMyTrip போன்ற முக்கிய ஸ்பான்சர்களும் இந்த முடிவை ஆதரித்துள்ளனர். பாகிஸ்தானுடனான அரசியல் தொடர்புகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (World Championship of Legends 2025) அரையிறுதியில் விளையாட வேண்டாம் என்று இந்திய சாம்பியன்ஸ் (India Champions) அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஸ்டேஜ் போட்டிகளை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் யுவராஜ் சிங் (Yuvraj Singh), ஷிகர் தவான், யூசப் பதான், இர்பான் பதான், ராபின் உத்தப்பா, பியூஸ் சாவ்லா போன்ற வீரர்கள் உள்ளனர். நேற்று அதாவது 2025 ஜூலை 29ம் தேதி நடந்த கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் வெறும் 13.2 ஓவர்களில் வீழ்த்தி இந்திய சாம்பியன்ஸ் அணி 2025 உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆசியக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..?
2025 ஆசியக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி மோதும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி நடைபெறக்கூடாது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம், கடந்த 2025 பிப்ரவரி 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்தான் காரணம். இதன் பிறகு, இந்திய விமானப்படை பாகிஸ்தானைத் தாக்கியது, அதற்கு அவர்கள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிட்டனர். இதனால்தான் பல இந்திய ரசிகர்கள் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராகப் போட்டியை விளையாடக் கூடாது என்று கூறி வந்தனர்.




2025 ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினால், இரு அணிகளும் வருகின்ற 2025 செப்டம்பர் 21 மற்றும் 2025 செப்டம்பர் 28ம் தேதிகளில் மீண்டும் மோத வாய்ப்புள்ளது.
ALSO READ: 2019ல் விராட் கோலியை நீக்க திட்டம் போட்டதா ஆர்சிபி? முன்னாள் ஆல்ரவுண்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா – பாகிஸ்தான் மோதுமா..?
🚨 INDIA OUT OF WCL SEMI FINAL 🚨
– India Champions Officially pull out of World Championship of Legends. This means, Pakistan Champions qualify into the Final 😲
~ What’s your take on this 🤔 pic.twitter.com/WzDL9JFOCE
— Richard Kettleborough (@RichKettle07) July 30, 2025
முன்னதாக, உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்றான EaseMyTrip இன்று அதாவது 2025 ஜூலை 30ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் WCL அரையிறுதிப் போட்டியில் இருந்து விலகியது. மெலும், பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட எந்தப் போட்டியிலும் பங்கேற்காது என தெரிவித்தது. இதுகுறித்து EaseMyTrip வெளியிட்ட அறிக்கையில், “உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்திய சாம்பியன்ஸ் அணியை நாங்கள் பாராட்டுகிறோம், நீங்கள் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் அரையிறுதி வெறும் விளையாட்டு அல்ல, பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் கைகோர்த்துச் செல்ல முடியாது. எனவே, EaseMyTrip ஆகிய நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாட்டுடனான உறவுகளை இயல்பாக்க முயற்சிக்கும் எந்தவொரு நிகழ்வையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். சில விஷயங்கள் விளையாட்டை விட பெரியவை. தேசம்தான் முதலில் வணிகம் இதன் பின்னர்தான்” என்று EaseMyTrip இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டி தெரிவித்திருந்தார்.
ALSO READ: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டியில் இந்திய அணி எப்படி செயல்பட்டுள்ளது..?
தென்னாப்பிரிக்கா சாம்பியன்களிடம் (DRS முறை மூலம்) 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த இந்திய சாம்பியன்ஸ் அணி, அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இங்கிலாந்து அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.