Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

West Indies Legends Jersey: 3 லட்சம் ரூபாய் தங்க ஜெர்சி..! அதிக மதிப்புள்ள ஆடையுடன் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்!

World Championship of Legends 2025: 2025 ஜூலை 18 அன்று தொடங்கிய உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 30 கிராம் தங்கம் பதித்த, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெர்சியை அணிந்துள்ளது. கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இந்த ஜெர்சியை அணிந்துள்ளனர்.

West Indies Legends Jersey: 3 லட்சம் ரூபாய் தங்க ஜெர்சி..! அதிக மதிப்புள்ள ஆடையுடன் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ்!
தங்க ஜெர்சிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jul 2025 13:08 PM

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2025 (World Championship of Legends 2025) போட்டி 2025 ஜூலை 18ம் தேதி முதல் தொடங்கியது. இந்தப் போட்டியில், இந்தியா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் மற்றும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இந்தநிலையில், இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் (West Indies Champions) அணி உலகின் மிக விலையுயர்ந்த கிரிக்கெட் ஜெர்சியை அணிந்துள்ளது. இந்த ஜெர்சியை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான்களான டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட் மற்றும் கிறிஸ் கெய்ல் (Chris Gayle) ஆகியோர் அறிமுகப்படுத்தினர். இந்த ஜெர்சி 18 காரட் தங்கத்தால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2025 போட்டி 2025 ஜூலை 18ம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில், 30 கிராம் தங்கம் பதித்த ஜெர்சியை வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அணிந்து விளையாடுகிறார்கள். இந்த ஜெர்சியை துபாயின் லோரென்ஸ் குழுமம் சேனல் 2 குழுமத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த ஜெர்சி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 18 காரட் தங்கத்தில் சிறப்பாக தயாரிக்கப்பட்டது. இந்த ஜெர்சி 30 கிராம், 20 கிராம் மற்றும் 10 கிராம் பதிப்புகளில் கிடைக்கிறது. கிடைத்த தகவலின்படி, ஒரு ஜெர்சியின் விலை இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

ஜெர்சி அறிமுகம்:

வெஸ்ட் இண்டீ அணியின் முதல் போட்டி எப்போது..?

உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டிக்கான தனது முதல் போட்டியை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அதாவது 2025 ஜூலை 19ம் தேதி முதல் விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக கிறிஸ் கெயில் செயல்படுவார். அதன்படி, உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2025 போட்டியில் பல புகழ்பெற்ற வீரர்கள் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே இதில் விளையாடுவார்கள்.

ALSO READ: 128 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒலிம்பிக்கில் களமிறங்கும் கிரிக்கெட்! வெளியான போட்டி அட்டவணை!

வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸின் முழு அணி விவரம்:

கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, லென்ட்ல் சிம்மன்ஸ், டுவைன் ஸ்மித், ஷெல்டன் கோட்ரெல், ஷிவ்நரைன் சந்தர்பால், சாட்விக் வால்டன், ஷானன் கேப்ரியல், ஆஷ்லே நர்ஸ், பிடல் எட்வர்ட்ஸ், வில்லியம் பெர்கின்ஸ், சுலைமான் பென், டேவ் முகமது, நிகிதா மில்லர்