Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Maargan : விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது.. படக்குழு வெளியிட்ட அப்டேட்!

Maargan Movie Trailer Update : நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் இறுதியாக ஹிட்லர் படம் வெளியானது. அந்த படத்தைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருவது மார்கன். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டைக் குறித்து, நடிகர் விஜய் ஆண்டனி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Maargan : விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது.. படக்குழு வெளியிட்ட அப்டேட்!
மார்கன் படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 25 May 2025 22:09 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஹிட்லர் (Hitler). இந்த படத்தினை அறிமுக இயக்குநர் தனா (Dhana) இயக்கியிருந்தார். இந்த படம் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. கடந்த 2024ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த படத்தினை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்கன் (Maargan). இந்த படமானது ஆரம்பத்தில் ககன மார்கன் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த படத்தினை அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் (Leo John Paul) இயக்கியுள்ளார்.

இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, நடிகர் விஜய் ஆண்டனியே தயாரித்து அதற்கும் இசையும் அமைத்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்திலே வெளியானது. அதைத் தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாகி நடந்து வந்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில், படக்குழு ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் இந்த மார்கன் படத்தின் ட்ரெய்லர் 2025, மே 25ம் தேதியில், மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

இந்த மார்கன் படத்தை நடிகர் விஜய் ஆண்டனி, பாத்திமா விஜய் ஆண்டனி என்ற பேனரின் கீழ் தயாரித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் க்ரைம் த்ரில்லர் மற்றும் குற்றம் சார்ந்த விசாரணை போன்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இதில் நடிகர் விஜய் ஆண்டனியுடன், நடிகர்கள் சமுத்திரக்கனி, ப்ரிகிதா சகா, அஜய் திஷன், தீபிகா எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் நடிகர் விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் அஜய் திஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அவரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் இந்த படத்திற்கு 1 மாதத்திற்கும் மேல் நாட்கள் இருக்கும் நிலையில், படக்குழு ட்ரெய்லரை ரிலீஸ் செய்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தனது கைவசத்தில் கிட்டத்தட்ட, 5 படங்களுக்கும் மேல் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் இவரின் புதிய படமான லாயர் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

benefits of walking : சாப்பிட்டவுடன் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?
benefits of walking : சாப்பிட்டவுடன் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?...
சிறுநீரகங்கள் செயலிழப்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
சிறுநீரகங்கள் செயலிழப்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?...
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பிரச்னையா இருக
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பிரச்னையா இருக...
அதிகமாக டீ குடிப்பீங்களா? அப்போ இந்த பிரச்னை ஏற்படலாம்!
அதிகமாக டீ குடிப்பீங்களா? அப்போ இந்த பிரச்னை ஏற்படலாம்!...
டையபடிக் ஷாக் பற்றி தெரியுமா? அதன் அறிகுறிகள் என்ன ?
டையபடிக் ஷாக் பற்றி தெரியுமா? அதன் அறிகுறிகள் என்ன ?...
அரக்கோணம்: துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக மன்ற உறுப்பினர் கைது.!
அரக்கோணம்: துப்பாக்கி வைத்திருந்ததாக திமுக மன்ற உறுப்பினர் கைது.!...
சிம்புவின் டைட்டில் கார்டு வீடியோவை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!
சிம்புவின் டைட்டில் கார்டு வீடியோவை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு!...
ரிஷபம் ராசியில் புதன்... தொட்டதெல்லாம் வெற்றி பெறும் 6 ராசிகள்!
ரிஷபம் ராசியில் புதன்... தொட்டதெல்லாம் வெற்றி பெறும் 6 ராசிகள்!...
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?...
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கலாமா?
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கலாமா?...
திரும்ப வருவேனா? வரமாட்டேனா..? ஓய்வு குறித்து தோனி ஜாலி பதில்!
திரும்ப வருவேனா? வரமாட்டேனா..? ஓய்வு குறித்து தோனி ஜாலி பதில்!...