AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இயக்குநராக இருப்பவருக்கு துரந்தர் ஒரு பாடமாக இருக்கும் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி

RJ Balaji Talks About Dhurandhar Movie Update: தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வரும் படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்தி சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற துரந்தர் படத்தை புகழ்ந்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநராக இருப்பவருக்கு துரந்தர் ஒரு பாடமாக இருக்கும் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 May 2026 11:14 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலஜி. இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியா இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது என்று தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பலாஜி அளித்த பேட்டி ஒன்றில் துரந்தர் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநராக இருப்பவருக்கு துரந்தர் ஒரு பாடமாக இருக்கும்:

கருப்பு படத்திற்காக வேலை செய்துகொண்டிருந்தபோது நாங்கள் பல படங்கள் பார்த்தோம். அவற்றிலிருந்து சிறுசிறு யோசனைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை என் படத்திற்கு உத்வேகமாகப் பயன்படுத்தினேன். சமீபத்தில் நான் துரந்தர் படத்தைப் பார்த்தேன், மற்ற பார்வையாளர்களைப் போலவே அதையும் ரசித்தேன். அது தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருந்தது. ஒரு திரைப்பட இயக்குனருக்கு, அந்தப் படம் ஒரு பாடம்.

இங்கே இரண்டு பாகங்களுக்கான பட்ஜெட் ஒரு கதாநாயகனின் சம்பளத்திற்குச் சமம். சில கூறுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள நான் அந்தப் படத்தை மீண்டும் பார்த்தேன். அது ஆடம்பரமாக எடுக்கப்பட்ட படமும் அல்ல. தேவைப்பட்ட இடங்களில் மட்டுமே அவர்கள் பணத்தைச் செலவழித்திருக்கிறார்கள். பல காட்சிகளில் பெரும்பாலும் அமைதியாக இருந்ததற்காக ரன்வீர்சிங்கிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அது மிகவும் கடினமான ஒரு விஷயம் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

Also read… கூலி படத்தின் மீதான விமர்சனம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் விளக்கம்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பா.லாஜி பேச்சு:

Also read… இணையத்தில் கவனம் பெறும் காவியக் காதல் படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ

Follow Us