AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மே 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விஜய்? இணையத்தில் வைரலாகும் GOAT பட காட்சி..

நம்பர் பிளேட் மட்டும் அல்லாமல், அவரது சக நடிகரான பிரேம்ஜி அமரன் கூட “2026-ல் நான் விஜய்க்கு வாக்களிப்பேன்; அவர் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார்” என்று முன்கூட்டியே கூறியிருந்தார். அந்த கணிப்பு தற்போது உண்மையாகி வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். 2026 தமிழ்நாடு தேர்தலில், விஜய் திருச்சி (கிழக்கு) மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

மே 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விஜய்? இணையத்தில் வைரலாகும் GOAT பட காட்சி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 May 2026 19:53 PM IST

மே 5, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஒவ்வொரு கட்டமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களையும் மாமல்லபுரத்திற்கு வருமாறு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அவர்கள் மூன்று நாட்கள் மாமல்லபுரத்தில் தங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மே 7 ஆம் தேதி பதவியேற்பு?

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வரும் மே 7ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இன்று காலை, ஆளுநருக்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், விஜய் நடித்த ‘GOAT’ திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவரது அரசியல் கனவுகளை முன்கூட்டியே சுட்டிக்காட்டியதாக பலர் கூறுகின்றனர்.

வைரலாகும் விஜய் பட காட்சி:

அந்த வீடியோவில், விஜய் ஓட்டும் காரின் பதிவு எண் “TN 07 CM 2026” என உள்ளது. இதில் “TN” என்பது தமிழ்நாடு, “CM” என்பது முதலமைச்சர், “2026” என்பது தேர்தல் ஆண்டை குறிக்கிறது. இந்த காட்சி, வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான ‘GOAT’ படத்தில் இடம்பெற்றுள்ளது. படம் வெளியான காலத்திலேயே விஜய் 2026 தேர்தலில் போட்டியிடுவார் என்ற பேச்சு இருந்து வந்தது.

மேலும் படிக்க: ஜன நாயகன் பட ஷூட்டிங்கில் தளபதி விஜயை வெட்கப்பட வைத்த பூஜா ஹெக்டே… வைரலாகும் வீடியோ

பிரேம்ஜி சொன்ன சூசகம்:

இதில் நம்பர் பிளேட் மட்டும் அல்லாமல், அவரது சக நடிகரான பிரேம்ஜி அமரன் கூட “2026-ல் நான் விஜய்க்கு வாக்களிப்பேன்; அவர் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார்” என்று முன்கூட்டியே கூறியிருந்தார். அந்த கணிப்பு தற்போது உண்மையாகி வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

2026 தமிழ்நாடு தேர்தலில், விஜய் திருச்சி (கிழக்கு) மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில், அவர் பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, திருச்சி (கிழக்கு) தொகுதியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், திமுகவுடன் இருந்த கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us