AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சன் டிவியில் வரும் புதிய சீரியல்.. வைரலாகும் ஷூட்டிங் போட்டோஸ்!

Parasakthi serial : தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் புகப்பெற்ற டிவியாக இருந்துவருவது சன் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் சீரியல்களுக்கு பஞ்சமே இல்லை என்ற நிலையில், மேலும் புதிதாக பராசக்தி என்ற சீரியலானது தயாராகிவருகிறதாம். அந்த சீரியலின் ஷூட்டிங் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது.

சன் டிவியில் வரும் புதிய சீரியல்.. வைரலாகும் ஷூட்டிங் போட்டோஸ்!
சன் டிவி பராசக்தி தொடர்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 May 2026 19:03 PM IST

தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சியாக இருந்துவருவது சன் டிவி (Sun TV). மக்கள் மத்தியில் சீரியல் என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது சன் டிவிதான். அந்த வகையில் வாரம் வாரமாக தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டாப் இடத்தை எப்போதுமே சன் தொலைக்காட்சி சீரியல்கள்தான் பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த சன் தொலைக்காட்சியில் மேலும் புதிய சீரியல் (New Serials) ஒன்று விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாம். அந்த சீரியலுக்கு பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். இந்த சீரியலானது ஒரு குடும்பத்தின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறதாம். ஏற்கனவே சன் டிவியில் கயல் (Kayal), எதிர்நீச்சல் (Ethirneechal ) , சிங்கபெண்ணனே மற்றும் மூன்று முடிச்சி போன்ற சீரியல்கள் மிகவும் பிரபலமாக இருந்துவரும் நிலையில், மேலும் புதிய சீரியல் இணையவுள்ளது.

இந்த சீரியலானது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. பராசக்தி என்ற சீரியல் சன் டிவியில் வெளியாகும் என இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. அந்த வகையில் தற்போது இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: யூத் பட வெற்றி.. சிவகார்த்திகேயனுடன் கொண்டாடிய கென் கருணாஸ் – வைரலாகும் வீடியோ!

பராசக்தி சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் தொடர்பான பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

சன் டிவி என்றாலே அதிகம் டிஆர்பி ரேட்டிங் கொண்ட சேனல் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இந்த டிவியை அடுத்தக்கதான், விஜய் தொலைக்காட்சியே உள்ளது. அந்த வகையில் தமிழில் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களில் 4 இடங்களை சன் தொலைக்காட்சி பிடித்துவிடும். அந்த அளவிற்கு இந்த டிவியில் சீரியல் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். தற்போது மேலும் புதிதாக பராசக்தி என்ற தொடரானது ஒளிபரப்பாக தயாராகிவரும் நிலையில், இதுவும் டாப் 5 டிஆர்பி ரேட்டிங் தொடர்களில் இடம்பெறுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவு செய்த துரந்தர் தி ரிவெஞ்ச்.. ஓடிடி ரிலீஸில் டுவிஸ்ட்..!

இந்த பராசக்தி தொடரில் நடிகர்கள் விஜயகுமார், வினோதினி வைத்தியநாதன் மற்றும் ரமேஷ் கண்ணா போன்ற சினிமா நடிகர்களும் இந்த சீரியலில் நடித்துள்ளனர். இந்த சீரியல் எப்போது, எந்த நேரத்தில் வெளியாகும் என்பது குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அந்த வகையில் சன் டிவியில் மாலையில் அல்லது மதிய வேளையில் இந்த தொடர் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகிவருகியது.

Follow Us