AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்திய வரலாற்றிலே முதல்.. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருதை வென்ற நடிகை ரோஜாவின் மகள்!

Rojas Daughter Makes History: தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலமாக இருந்துவருபவர் நடிகை ரோஜா. இவரின் மகள் அன்ஹு மாலிகா, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஹெர்மன் பி. வெல்ஸ் விருதை பெற்றுள்ளார். இவரே இந்தியாவில் இந்த விருத்திய வென்ற முதல் மாணவி என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய வரலாற்றிலே முதல்.. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருதை வென்ற நடிகை ரோஜாவின் மகள்!
ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகாImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 May 2026 17:33 PM IST

தென்னிந்திய சினிமாவில் ஒருகாலத்தில் பிரபல நாயகியாக இருந்துவந்தவர் நடிகை ரோஜா (Actress Roja). இவர் தற்போது அரசியலிலும் இருந்துவருகிறார். இவர் தமிழ் சினிமாவில் கார்த்திக் முதல் அஜித் குமார் (Ajithkumar) வரை பல உச்ச நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். 90ஸ் தொடக்கத்தில் தொடர்ந்த தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்திவந்தார். அந்த வகையில் சின்னத்திரை சீரியல்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி சீசன் 7ல் (Cook with Comali Season 7) நடுவராகவும் நடிகை ரோஜா இருந்துவருகிறார். இந்த நிகழ்ச்சியின் 4 வாரங்களை கடந்து சிறப்பாக ஒளிபரபகைவருகிறது. அந்த வகையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா என்பவர், அமெரிக்க ப்ளூமிங்டனில் உள்ள இந்தியானா யுனிவர்சிட்டியில், கணினி அறிவியல் படித்தவந்தார்.

அந்த வகையில் இவருக்கு, இந்தியானா பல்கலைக்கழகம் (Indiana University), “ஹெர்மன் பி. வெல்ஸ்” (Herman B. Wells) என்ற கௌரவ விருதை கொடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவிலே இந்த சிறப்பான விருந்தை வென்ற முதல் மாணவியாக நடிகை ரோஜாவின் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எத்தணை சிறப்பான ஒரு நடவடிக்கை இது… முதலமைச்சர் விஜயின் செயலைப் பாராட்டிய நடிகர் விஷால்!

தனது மகள் அன்ஷு மாலிகா குறித்து நடிகை ரோஜா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Roja Selvamani (@rojaselvamani)

நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு, அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டுவந்தார். அவர் அங்கு, லூட்டி ஸ்கூல் ஆப் இன்பர்மேட்டிண்டிக்ஸ், கம்பியூடிங் அண்ட் இஞ்சியியரிங் என்ற கல்லூரியில் கணினி அறிவியல் பயின்றுவந்தார். அந்த வகையில் இவருக்கு இந்தியானா பல்கலைக்கழகம் ஹெர்மன் பி. வெல்ஸ் விருதை கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அந்த வகையில் அமெரிக்க யுனிவர்சிட்டியில் இந்த சிறப்பான கௌரவத்தை பெரும் முதல் இந்திய மாணவியர், நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா இருக்கிறார். அந்த வகையில் தனது மகளை நினைத்து பெருமைப்படுவதாக நடிகை ரோஜா பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரொம்ப பெருமையா இருக்கு.. மக்கள் எல்லாரும் உங்கள் பக்கம் நிற்கிறார்கள்.. முதல்வர் விஜய் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் ஸ்ரீமன்!

நடிகை ரோஜா வெறும் நடிகையாக மட்டுமில்லாமல், தெலுங்கானாவில் அரசியல்வாதியாகவும் இருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி சீசன் 7ல் நடுவராக இருந்துவருகிறார். அந்த வகையில் இவரின் மகள் அன்ஷு செய்த சாதனை குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. மேலும் நடிகை ரோஜா வெளியிட்ட பதிவின் கேளே பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us